பஸ் விபத்து

கனடாவின் க்விபெக் பிரதேசத்தில் பகல் உணவு சேமிப்பு களஞ்சியசாலை ஒன்றுக்குள் பஸ் சென்று விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்தத்தில் மேலும் 6 பிள்ளைகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த பஸ்சின் சாரதி வேண்டுமென்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அவர் மீது மனித கொலை வழக்கு தொடரப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

உழவு இயந்திரம் ஆற்றில் பாய்ந்து விபத்து

அட்டன் – டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்று (06) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தொழிற்சாலைக்கு விறகு ஏற்றிக்கொண்டிருந்த போது திடீரென் உழவு இயந்திரம் தானாக இயங்கி முன்நகர்ந்துள்ளது. இதன் போது சாரதி உழவு இயந்திரத்தினை நிறுத்துவதற்கு இயந்திரத்தில் ஏறிய போது தடுக்கி விழுந்தாகவும் அதனை தொடர்ந்து […]