திரைப்பட இயக்குநர் விஸ்வநாத் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் விஸ்வநாத் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மகா கலைஞர் விஸ்வநாத் மறைவு முகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என […]

பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவு வருத்தமளிக்கிறது. சினிமா உலகில் […]

குறி வைத்து தாக்கப்பட்ட பாலஸ்தீன ராக்கெட் ஆலை

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர் கதையாய் நீண்டு வருகிறது. சமீபத்தில் அந்த பிராந்தியத்துக்கு வந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், அமைதிக்கு அழைப்பு விடுத்த நிலையில் இரு தரப்பு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இஸ்ரேல் விமானங்கள், பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியில் உள்ள ராக்கெட் உற்பத்தி ஆலையை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் நேற்று முன்தினம் […]

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 எம்.பி.க்களுக்கு முக்கிய பதவிகள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 எம்.பி.க்களுக்கு அமெரிக்காவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எம்.பி.க்கள், ராஜா கிருஷ்ணமூர்த்தி (வயது 49), அமி பெரா (57) , பிரமிளா ஜெயபால் (57 ), ரோகன்னா (46) ஆவார்கள். இவர்கள் 4 பேரும் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். * ராஜா கிருஷ்ணமூர்த்தி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் சபையின் சீனாவுக்கான ‘ரேங்கிங்’ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் நடத்தையின் பல்வேறு அம்சங்கள், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் சீனாவின் அச்சுறுத்தல்கள் […]

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு – ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா மீண்டும் இலங்கையிடம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை குறித்த நான்காம் அகில கால மீளாய்வின் போது இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை நாளைய தினம் ஜெனீவா நேரப்படி மாலை 4.30 மணிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்பு, கோவிட் […]

சன் லூஸ் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது ஹர்மன்பிரீத் கவுர் இந்திய அணி

தென்ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஈஸ்ட் லண்டனில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் இறுதிஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.  

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கரண் ஷிண்டே

இந்தூரில் நடைபெறும் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திரா முதல் நாளில் 2 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்து இருந்தது. ரிக்கி புய் 115 ரன்னுடனும், கரண் ஷிண்டே 83 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கரண் ஷிண்டே 110 ரன்னிலும், ரிக்கி புய் 149 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். அதன் பிறகு வந்தவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. இதனையடுத்து ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 379 […]

விடுவிக்கப்படவுள்ளன இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள்

பொது மக்களுக்கு சொந்தமான 108 ஏக்கர் காணிகள் நாளைய தினம் (03.02.2023) இராணுவத்தினரால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணி பத்திரங்கள் வழங்கி விடுவிக்கப்படவுள்ளன. யாழ். வலி – வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விடுவிக்கப்படவுள்ளன. பல்லாண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகளை 2019ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் காணி விடுவிப்பு நிகழ்வில் யாழ். மாவட்டத்தை […]

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வசந்த முதலிகே

இது போராட்டத்தின் மற்றுமொரு ஆரம்பம் என பிணையில் விடுதலையான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகே தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (01.02.2023) பிணையில் விடுதலையான வசந்த முதலிகே, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பில் அவர் கூறும் போது, இந்த நாட்டில் தொழிற்சங்க கூட்டணிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் பலர் ஒன்றாக இணைந்து முன்னெடுத்த போராட்டம் காரணமாக இந்த குண்டர் அரசாங்கம் மக்களின் அதிகாரத்திற்கு […]

நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டு எலெக்ட்ரிக்கல் கடையில் தீ

சிவகாசியைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம். இவர் சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள மணிநகர் பகுதியில் இவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்தக்கடையில் தரை தளம் உட்பட 5 தளங்களில் பல்வேறு மின் சாதனங்கள் மற்றும் பிளம்பிங் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ரவி அருணாச்சலம் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் எலெக்ட்ரிக்கல் கடையில் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதனைப் […]