டிரம்ப் மீது கிரிமினல் வழக்குப் பதிவு

அமெரிக்காவில் 2017 ஆண்டு முதல் 2021 வரை ஜனாதிபதியாக இருந்த டிரம்ப், 2016-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தன்னுடன் நெருக்கமான உறவில் இருந்ததாக பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார். இதை மறுத்த டிரம்ப், இது பற்றி மேலும் பேசாமல் இருக்க நடிகைக்கு, கட்சியின் பிரசார நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச […]
பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானில் பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லமாபாத், ராவல் பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹட், லக்கி மார்வட் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உத்தர பிரதெசத்தில் இரவு ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இரவு […]
இந்த எண்கள் கொண்ட மருத்துகளை யாராவது வாங்கியிருந்தால்…?

கனடாவில் cystic fibrosis என்னும் பிரச்சினைக்கான மருந்து ஒன்றைத் திரும்பப் பெறுவதாக கனடா மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. என்ன காரணம்? Cystic fibrosis என்னும் அந்த பிரச்சினைக்கான Cayston என்னும் மருந்தே திரும்பப் பெறப்படுகிறது. 032168 மற்றும் 033357 என்னும் lot எண்கள் கொண்ட Cayston (aztreonam) மருந்து வைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் குப்பிகளின் சுவர்களில் கீறல்கள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி கீறல்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், மருந்துக்குள் கண்ணாடித் துகள்கள் கலந்திருக்கக்கூடும். ஆகவே, இந்த எண்கள் […]
கனடாவில் இனவெறி தாக்குதல்

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் சீக்கிய மாணவர் ககன்தீப் சிங் (வயது 21). இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ககன்தீப் சிங் தனது வீட்டுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ககன்தீப் சிங் மீது ‘விக்’ உள்ளிட்டவற்றை வீசி அவரை தொல்லை செய்தனர். போலீசில் புகார் அளிப்பேன் என ககன்தீப் சிங் எச்சரித்த பிறகும் அந்த இளைஞர்கள் அவரை தொடர்ந்து துன்புறுத்தினர். இதில் […]
அமெரிக்காவில் திடீரென வீசிய பனிப்புயலால் பயங்கர பனிச்சரிவு

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஆஸ்பெனில் ஏராளமான பனிமலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் அங்குள்ள ஒரு பனி மலையில் வீரர்கள் பலர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீசிய பனிப்புயலால் அங்கு பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்த வீரர்கள் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பத்திரமாக […]
வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் […]
அடுத்த சில வாரங்களில் ஊழியர்களை பணிநீக்க முடிவு – அமேசான் நிறுவனம்

டுவிட்டர், பேஸ்புக், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் ஏற்கனவே 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை அடுத்த சில வாரங்களில் பணிநீக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாசி, ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார். […]
கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் குயிப்டோ என்ற பகுதியில் ராணுவ தளவாடங்களை வினியோகம் செய்யும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது. அதில் ஒரு பெண் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் இருந்தனர். அப்போது திடீரென அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் நடுவானில் இருந்து கீழே விழுந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை […]
துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஒன்றோடொன்று மோதி சேதமடைந்துள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் கண்டெய்னர்களிலும், கூடாரங்களிலும் வசித்துவரும் நிலையில், திடீர் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். […]
ஜெர்மனியில் சிறுமியின் கொலை சம்பவம்

ஜெர்மனியில் சிறுமியின் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டில் வீசப்பட்ட சிறுமியின் உடலை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். ஜெர்மனியில் கடந்த 13 ஆம் திகதி ரைலான்வாஸ் மாநிலத்தில் உள்ள வொரைடன் பேர்க் என்ற கிராமத்தில் 12 வயது சிறுமியானவர் தனது பெண் சிநேகிதியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த 12 வயது சிறுமி சிநேகிதியிடம் இருந்து 3 கிலோ மீற்றர் துரத்தில் உள்ள தனது வீட்டுக்கு காட்டு பாதையின் ஊடாக வந்திருக்கின்றார். இந்த சிறுமியானவர் தனது வீட்டை சென்று […]