உலக சாதனை படைத்துள்ள பறவை!

13,500 கிலோமீட்டர், 11 நாட்கள் இடைவெளியே இல்லாமல் அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பறந்து சென்ற பறவை உலக சாதனையை முறியடித்துள்ளது. பார்-டெயில் காட்விட் பறவை (bar-tailed Godwit) ஒன்று அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 மைல்கள் இடைவிடாமல் பறந்து, ​​ஒரு பறவையின் நீண்ட இடைவிடாத இடம்பெயர்வுக்கான முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. 11 நாட்கள் ஓய்வின்றி உணவின்றி பயணம் செய்த அந்த பறவையின் செயற்கைக்கோள் டேக் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் முதுகில் இணைக்கப்பட்ட 5G செயற்கைக்கோள் Tag-ன் படி, […]

உடல் எடையை குறைப்பதற்கு ஆசைப்பட்டு தனியார் நிறுவனத்தை அணுகிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவைச் சேர்ந்தவர், சூர்யா (20). இவர் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் மிகவும் பருமனாக இருந்ததால் தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்த தனியார் நிறுவனம் வழங்கிய உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி, 10 நாட்களாக சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 1ஆம் […]

கனடாவில் வீடு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கனடாவில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அந்தவகையில் றொரன்டோவில் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த போது, அவர்களது வீடு வேறு நபர்களினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீட்டு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.இட்டோபிகொக் பகுதியில் இவ்வாறு வீடு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வீட்டின் உண்மையான உரிமையாளர்கள் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடு சென்றுள்ளதையடுத்து உண்மையான வீட்டு உரிமையாளர்கள் போன்று போலி ஆவணங்களை தயாரித்து இந்த […]

நாட்டில் அபிவிருத்தியை விடவும் மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்

” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அபிவிருத்தியைவிடவும் மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும். அதற்கமையவே கொட்டகலை சுகாதார பிரிவில் சத்துணவு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.” – என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவரும், இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார். கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லையில் மந்த போசனை நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 280 குடும்பங்களுக்கு அரிசி, கடலை, நெத்தலி முதலான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் […]

உழவு இயந்திர பெட்டி கழன்று விபத்து – நால்வர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில் உழவு இயந்திர கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நானுஓயா கொல்சி தோட்டத்தில் இருந்து மட்டுக்கலை தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்து ஏற்றிச் சென்றவர்களே உழவு இயந்திரத்தின் கொக்கை கழன்று அதன் பெட்டி தலைகீழாக வீழ்ந்ததாகவும் இதனைத் தொடர்ந்து அதில் பயணித்த நால்வரும் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட […]

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து சௌமிய பவாணில் நேற்று கலந்துரையாடல்!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு மாகாணங்களிலும்,மாவட்டங்களிலும் உள்ள வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட உள்ள எல்லைக்கு உட்பட்ட வட்டாரங்களில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக மாவட்ட பிரதிநிதிக்ள் தெரிவித்தனர். மேலும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக பல கோணங்களில் ஆராயப்பட்டது. இறுதி தீர்மானம் இம்மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தேர்தல் குழு, […]

கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்

” கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன். அதற்கான ஓர் பாலமாக அரசியலையும் பயன்படுத்துவேன். எதிர்வரும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் எனது பிரதிநிதிகளை நிறுத்துவேன்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், விஷ்ணு ஆரோஹனம் அமைப்பின் தலைவருமான ச. திருமுருகன் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (06.01.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” 2017ஆம் ஆண்டில் விஷ்ணு ஆரோஹனம் எனும் அமைப்பை […]

விடுதி அறையில் மர்மமாக இறந்த கிடந்த மாணவன்

ஹோமாகமை தியகம தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவன் விடுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளதாக கஹத்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடன் வாங்கிய நாடுகள் இதுவரை மீள கடன் செலுத்தும் காலவரையறைகளை நிர்ணயிக்கவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

கடன் வாங்கிய நாடுகள் இது வரை மீள கடன் செலுத்தும் காலவரையறைகள் நிர்ணயிக்கப்படவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எதிர்பார்க்கும் கடன்கள் இந்த மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவது தொடர்பில் மீண்டும் அவதானம்

தாதியர்கள், விசேட வைத்தியர்கள், புகையிரத சாரதிகள் போன்ற விசேட அரச ஊழியர்களின் ஓய்வு காலம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.