தோனி மகளுக்கு மெஸ்ஸி அளித்த பரிசு; இணையத்தில் வைரல்!

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வெற்றியை சுவீகரித்து சாதனை படைத்தது. மெஸ்ஸி கேப்டனாக பொறுப்பேற்று முதல்முறையாக கோப்பை வென்றது ஆர்ஜெண்டீனா. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனியின் மகள் ஜிவாவுக்கு தான் கையெழுத்திட்ட ஆர்ஜென்டீனா அணியின் டீ-சர்ட்டை மெஸ்ஸி பரிசாக அனுப்பியுள்ளார். அந்த டீ-சர்ட்டை அணிந்து இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தோனியின் மகள், ‘தந்தையை போல் பிள்ளை’ எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த […]

7 நாட்களில் 5 கிலோ எடையை வேகமாகனுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்

இன்றைய காலத்தில் உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கு பெரும் கஷ்டமாக இருக்கும். எடை மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கும்போது அவை உடலிலும் பல நோய்களை உண்டாக்க தொடங்குகிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு. தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வரவைக்கிறது. வயதான பிறகு வரும் உபாதைகள் 30 வயது தொடரும் போதே வந்துவிடுகிறது. இத்தகைய பிரச்சனைக ளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில் ஆரம்ப கட்டத்திலேயே உடல் எடையைக் குறைக்க […]

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா தாக்கிய ஆண்களின் 30 பேரிடம் நடத்திய ஆய்வில் 12 பேருக்கு 40 சதவீதம் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தமை தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இது குறித்து டெல்லி, பாட்னா மற்றும் ஆந்திராவின் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பாட்னாவில் எய்ம்ஸ் வைத்தியசாலையில் ஒக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல் 2021க்கு இடையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19 […]

இலங்கைக்கு வருகதரவுள்ள தமிழகத்தின் பிரபல நடிகர்! ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யா நடிக்கும் 42 வது திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் இலங்கையிலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஏற்கனவே கோவா, சென்னை போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கையின் வனப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்காக, படிப்பிடிப்புக்குழு விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கதையைக் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் 2023ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பொலிவூட் நடிகை […]

பிக் பாஸில் இறுதி வரை செல்லும் 5 போட்டியாளர்கள்…டைட்டில் வின்னர் இவர் தானாம்..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யார் இறுதி வாரத்தில் இருக்கும் 5 போட்டியாளர்கள் மற்றும் டைட்டிலை தட்டி தூக்கி செல்லும் போட்டியாளர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.விஜய் டிவியில் கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 20 பேர் கொண்டு ஆரம்பிக்ப்பட்டது. இதில் வையல் கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி நுழைந்தார். மேலும் இதில் முதல் வாரம் சாந்தி மற்றும் ஜிபி முத்து இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள். […]

பிரபல நடிகை கிறிஸ்டி அலி மரணம்

‘Cheers’ என்ற அமெரிக்க நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடரின் மிகவும் பிரபலமான நடிகையான கிறிஸ்டி அலி (Kirstie Alley) மரணமடைந்தார். அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விச்சிட்டாவில் பிறந்த இவர் இறக்கும் போது வயது 71. புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் பல படங்களில் நடித்துள்ளார் மேலும் சியர்ஸ் என்ற நகைச்சுவைத் தொடரில் நடித்ததற்காக எம்மி விருதையும் வென்றுள்ளார்.

நடிகை கெளதமிக்கு டாக்டர் பட்டம்.. வெளிநாட்டு பல்கலைகழகம் கெளரவம்!

தமிழ் திரையுலகில் ரஜினி கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கவுதமி என்பதும் தற்போது அவர் தீவிர அரசியலில் உள்ளார் என்பதும் தெரிந்ததே. பாஜகவில் முக்கிய புள்ளியாக இருக்கும் கௌதமிக்கு மலேசிய பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து இது குறித்த புகைப்படங்களை கவுதமி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது பாஜகவில் இருக்கும் நடிகை கவுதமி டாக்டர் பட்டம் குறித்து […]

இந்திய பிரபல நடிகை தற்கொலை

பிரபல இந்திய தொலைக்காட்சி நடிகையான துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மகாராஷ்டிராவில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் நேற்று (24) தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படப்பிடிப்பின் போது கழிவறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அதன்படி, கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, ​​அவள் உள்ளே இருந்தாள். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மரணம் தற்கொலையா […]

இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் பதுக்கிய 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை:

இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் பதுக்கிய 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை, மரைக்காயர்பட்டிணம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா எண்ணெய், கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன், வாசனை திரவியங்களின் கூடிய நக பாலிஷ், சமையல் மஞ்சள், செருப்பு, கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக அடுத்தடுத்து அதிகளவு பிடிபட்டு வருகின்றன. இதை தொடர்ந்து மண்டபம் அருகே வேதாளை கடற்கரை […]

சீனாவில் தெருக்களில் உடலை தகனம் செய்யும் மக்கள்!

சீனாவில் கொரோனா தொற்று தொடர்ந்து தீவிரமாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், தங்கள் சொந்தங்களின் உடலை தெருக்களில் தகனம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாளுக்கு நாள் இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் சீன மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சீன அரசு தளர்வுகளை […]