ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிப்பது அதிகரிப்பு

ஒட்டாவா நகரில் கோவிட் தாக்கம் காரணமாக நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. ஒட்டாவா மக்கள் மத்தியில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டாவாவின் மருத்துவ அதிகாரி மருத்துவர் வீரா எட்சஸ்இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு இந்தக் காலப் பகுதியை விடவும் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிகi;க அதிகரித்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார். கழிவு நீர் கோவிட் தொற்று குறித்த பரிசோதனைகளின் மூலம் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என […]

ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர் வெற்றி

கனடாவின் ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழை பூர்வீகமாகக்கொண்ட பார்த்தி கந்தவேள் வெற்றி பெற்றுள்ளார். ஸ்காப்றோ தென்மேற்கு வட்டாரத்தில்இடைத் தேர்தலில் பார்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளார். ரொறன்ரோ பாடசாலை சபையின் பொறுப்பாளராக பார்த்தி கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி இடைத் தேர்தலில் பார்த்தி 4641 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். மேலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கெவின் ரூபசிங்க 3854 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்காபரோ தென்மேற்கு வட்டாரத்தில் உறுப்பினராக பதவி வகித்த கெரி க்ராவொர்ட் ராஜினாமா செய்த […]

ஜெர்மனிய திரைப்பட போட்டியில் சாதித்த இலங்கை இளைஞன்…

ஜெர்மனிய அரசின் டார்ஸ்டாட்  பல்கலைக்கழக இலங்கை இளைஞர் போட்டியொன்றில் வெற்றியீட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். லொஸ்ட் இன் லெங்வேஜ் என்ற குறுந்திரைப்படம் சிறந்த திரைகதைக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினை தொடர்பில் விவாதிக்கும் ஓர் கதைக் கருவினைக் கொண்ட குறுந்திரைப்படமாக இது அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு உதவுமாறு குறித்த தமிழ் இளம் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் முகநூல் பதிவு பின்வருமாறு…. ஜெர்மனிய அரசின் டார்ம்ஸ்டாட் பல்கலைக்கழகம் – திரைப்பட கல்லூரியின் மாணவர்கள் ஆகிய […]

காஸா மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு கனடாவில் போராட்டம்

காஸா பிராந்திய மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு கனடாவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காஸாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவிற்கும் அரேபிய நேச நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் கனடாவின் பல நகரங்களில் போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ரொறன்ரோ, மொன்றியால், ஒட்டாவா, பிரிட்ரிக்சன் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பலஸ்தீன இளைஞர் அமைப்பு என்ற […]

சீக்கிய மதத் தலைவரின் கொலையின் பின்னணியில் இந்தியா?

கனடாவில் சீக்கிய தலைவரின் கொலையுடன் இந்தியாவிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். வான்கூவாரில் ஹார்தீப் சிங் நிஜார் ன்ற சீக்கிய தலைவர் கடந்த ஜூன் மாதம் சீக்கிய ஆலயத்திற்கு எதிரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா செயற்பட்டுள்ளமைக்கான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இந்திய ராஜதந்திரியை கனடா நாடு கடத்தியுள்ளது. இந்த படுகொலைச் […]

கனடாவில் போலி வேலை வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் கிரிப்டோ கரன்சி மோசடி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக போலி வேலை வாய்ப்புகள் வழங்கும் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போலி வேலை வாய்ப்பு மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடியா மோசடி தவிர்ப்பு நிலையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் சுயாதீன பணிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி இவ்வாறு மோசடி […]

இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும் தமிழர்களை ஒழிக்க முடியாது -கனடாவில் மனோ கணேசன்

படங்கள் கிருபா பிள்ளை இலங்கையில் வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், நாடு முழுக்கவும் யுத்தம் இல்லை. ஆனால் இனவாதம் இருக்கிறது என கனடா டொரென்டோவில் நிகழ்ந்த தமிழர் தெருத்திருவிழாவில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார். தற்சமயம் கனடா டொரோண நகருக்கு விஜயம் செய்திருக்குமு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் மேலும் கூறியதாவது: இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும், சுற்றி சுற்றி அடித்தாலும், சுனாமியாக அடித்தாலும் […]

பறை இசை ஒலிக்க கோலாகலமாக ஆரம்பமான கனேடிய தமிழர் தெருவிழா!

  படங்கள் கிருபா பிள்ளை  கனடா தமிழ் மக்களால் கொண்டாடப்படும் தமிழர்களின் திருவிழாவான ” தமிழர் தெரு விழா” இன்று டொரோண்டோ மார்க்கத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.   கனேடிய அமைச்சர் கெரி ஆனந்தச்ஙகரி உட்பட ஏராளமான பிரபலங்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கோண்டனர் . கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆலோசகர் சிவன் இளங்கோ தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பறை இசை பரத நாட்டியம் உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். இன்று இரவு  இசை நிகழ்ச்சிகள் […]

இந்தியவம்சாவளி இலங்கை தமிழர்களின் ஒன்றுகூடல்! ஸ்காபுரோவில் சிறப்பாக நடந்தது!

கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களின் ஒன்று கூடல் ஸ்காபுரோ தொம்சன் மெமோரியல் பார்க்கில்  இடம்பெற்றது கனடாவின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் இந்தய வம்சாவளி இலங்கை தமிழர்கள் குடும்பம் சகிதமாக கலந்து கொண்டதாக கனடா இந்தியவம்சாவளி இலங்கைதமிழர்  பேரவையின் தலைவர் தலைவர் சிதம்பரம் கிருஸ்ரணராஜ்  கூறினார்.

கனடா – இந்திய பூர்வீக இலங்கை தமிழ் பேரவையின் ஒன்று கூடல் டொரோண்டோவில் நாளை !!

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடா நாட்டில் பல்வேறு மாகணங்களில் பிரிந்து வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் ஒன்று கூடல் நாளை ஸ்காபுரோ தொம்சன் மெமோரியல் பார்க்கில் இடம்பெறுகிறது.   இந்த நிகழ்வில் ஒன்று கூடலுடன் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன் சார் தேவைகள் குறித்தும் விசேடமாக மாணவர்களின் கல்விக்கு எவ்வாறான செயற்திட்டங்களை மேற்கொள்வது என்பது குறித்து எம் மக்களோடு கலந்துரையாட இருப்பதாக பேரவையின் தலைவர் தலைவர் சிதம்பரம் கிருஸ்ரணராஜ் கூறினார். நாளைய நிகழ்விற்கான ஏற்பாடுகள் […]