அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு இலவச அரிசி வழங்கி வைக்கப்பட்டது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் எண்ணக்கருவிற்கு அமைவாக 2022ஃ2023 ஆண்டுக்கான பெரும்போக நெல்லை அரசு விலைக்கு பெற்றுக்கொள்வது மற்றும் நெல்லை பகிர்ந்தளிக்கும் வேலைதிட்டத்தின் கீழ் இ.தொ.கா பொது செயலாளரும் , நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட இஞ்சஷ்ரிஇடில்லரிஇ ஓல்டன்இ ட்ரஷ்பிஇமாநெலிஇப்ரன்லோஇமஸ்கெலியா ஆகிய கிராம சேவகர் பிரிவில் உள்ள 3,750 க்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு இலவச அரிசி வழங்கல் நிகழ்வு இ.தொ.கா வின் தவிசாளரும் […]
நவ்ஜோத்சிங் சித்து விடுதலை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் கடந்த 1988-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார். காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் குர்ணாம்சிங் என்பவரை நவ்ஜோத்சிங் சித்து தாக்கினார். படுகாயம் அடைந்த குர்ணாம்சிங் உயிரிழந்தார். இந்த வழக்கில் நவ்ஜோத்சிங் சித்துக்கு பஞ்சாப் ஐகோர்ட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். பல ஆண்டுகளாக விசாரணை […]
IPL – இன்று இரண்டு லீக் ஆட்டங்கள்

16-வது IPL – 2வது நாளான இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.30க்கு மொகாலியில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன. இரவு 7.30க்கு லக்னோவில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
சென்னைக்கு பாம் பூசிய குஜராத்

IPL கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் (GT) முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 23 ரன்னும், ஷிவம் […]
இலங்கைக்கு மறக்க முடியாத தோல்வி

இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டியிலும் (ODI) நியூசிலாந்து அணி 6 விக்கெடடுகளால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி சார்பாக பெதும் நிஸ்ஸங்க 57 ஓட்டங்களை பெற்றார். நியூசிலாந்து அணி சார்பாக மெட் ஹென்றி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஹென்றி ஷிப்லி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி […]
ஐ ஜாலி – இன்று IPL

16வது IPL கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் (GT), முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் (CSK) மோதுகின்றன. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று போட்டி தொடங்கும் முன் பிரமாண்டமான ஆடல் , பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை […]
விளையாட்டுத்துறை அமைச்சர் ICCக்கு கடிதம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என விசாரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள், இணையத்தளங்கள் மற்றும் இலங்கையின் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடிதம் […]
West Indies won by 7 runs

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது T20 இல் மேற்கிந்திய தீவுகள் அணி எழு ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி மே.தீவுகள் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஜோஹானஸ்பேக்கில் நடைப்பெற்ற மூன்றாவது T20யில் முதலில் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றது. 221 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களை […]
இலங்கை அணிக்கு 20% அபராதம்

இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 /% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ICC இந்த அபராதத்தை விதித்துள்ளது. இதனிடையே, இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனக்க குற்றச்சாட்டு தொடர்பான குற்றத்தை ஏற்றுக்கொள்வதால், குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் மேற்கொள்ள மாட்டார்கள் என ICC தெரிவித்துள்ளது.
இரண்டாவது ODI

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ODI போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. நியூஸிலாந்தின், கிறைஸ்ட்சேர்ச் இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு இன்று காலை முதல் மழை குறுக்கிட்டதால் போட்டியை ஆரம்பிப்பதற்கு தடை ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதாக போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.