ஐ.ஐ.டி வளாகத்தில் உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு…

உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பிடிப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மலைப்பாம்பானது சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிடிக்கப்பட்ட 7 முதல் 8 அடிகள் கொண்ட இந்த மலைப்பாம்பு குட்டி கிண்டி தேசிய பூங்கா அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருந்து….

இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இம்யூனோகுளோபுலின் மருந்துகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய மஹாராஸ்டிரா சேர்ந்த இந்திய நிறுவனம், இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இலங்கை இறக்குமதியாளர், அத்துடன் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட துறைமுகம் மற்றும் இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட துறைமுகம் பற்றிய விபரங்களைக் கேட்டு இந்த இந்திய நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. அத்துடன் இந்தியாவின் மத்திய, மாநில மற்றும் பிராந்தி உணவு […]

பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை – ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது. இந்த நிலையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ வட்டி) விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவிகிதமாகவே நீடிக்கும். வீடு, வாகன கடன்களுக்கான வட்டி […]

பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர் பலி ! 30 பேர் காயம்!

குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  – 3 பேர் பலியானதுடன் , 30 பேர் காயமடைந்துள்ளனர். தென்காசியில்  இருந்து பேருந்தில்  54 சுற்றுலா பயணிகள் ஊட்டி சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ழது விபத்து காரணமாக அப்பகுதியில் ஒன்றரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  

காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு ! இயல்புவாழ்க்கை முடக்கம்:

தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் முழு ஆதரவு கிடைத்ததால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. பெங்களூருவில் நடிகர் சிவராஜ்குமார் தலைமையில் கன்னட திரையுலகினர் போராட்டம் நடத்தினர். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து கர்நாடகாவில் செப்டம்பர் 29ம் தேதி மாநில முழு […]

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே பலமுறை செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது. அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் செப்டம்பர் 20 […]

அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட மாற்றம்!

அண்ணாமலையுடன்‌ புகைப்படம் எடுத்த காவலர் பணியிட மாற்றம்! – என்ன நடந்தது? கணேசன், காவலர் சீருடையில் அண்ணாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், அண்ணாமலையின் சமூக வலைதளப் பக்கத்திலும் பகிரப்பட்டது ‘ என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பா‌.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டுவருகிறார். கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வருகைதந்த அண்ணாமலை, கூடலூர் நகரில் தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர், கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து அன்றைய […]

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்கள் – பிரதமர் மோடி

பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மத்திய அரசு துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனடிப்படையில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அப்போது அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் 10 […]

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த – ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- நெல்லை-சென்னை, சென்னை-விஜயவாடா இடையே இரண்டு புதிய ரெயில்கள் உட்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்ததற்காக பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் சென்னை எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால் பயண நேரம் தற்போது 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும், இந்த […]

குஜராத்தில் திடீரென இடிந்து விழுந்த பாலம்

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை இந்த பாலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இரு துண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததால், அதன் மீது சென்றுகொண்டு இருந்த குப்பை லாரி, இருசக்கர வாகனங்களும் ஆற்றில் விழுந்தன. உடனடியாக […]