எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த முறையான வேலைத்திட்டம்

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (13) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேவைக்காக எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு தமது நிறுவனம் தயாராக இருப்பதாக சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதற்காக, தற்போதுள்ள முறைமைக்கு அமைவாக தமது […]

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

ஒரு போதும் தேர்தலுக்கு பயந்ததில்லை: மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண (SLPP) ஒரு போதும் தேர்தலுக்கு பயந்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மொணராகலையில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சில கட்சிகள் மக்கள் விருப்பு, வெறுப்புகளை அறியாது மக்களின் உயிரை பணயம் வைத்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆகவே தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் மொட்டுக் கட்சி (SLPP) வெற்றி பெறுவது நிச்சயம் என அவர் மேலும் கூறினார்.

மட்டக்குளி, காக்கா தீவு-கடற்கரையைப் தூய்மைப்படுத்தும் திட்டம் (Photos)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயினால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. கடற்கரையோரத்தில் உள்ள குப்பைகளை இயந்திரம் மூலம் அகற்றும் இந்தத் திட்டம் கொழும்பு மட்டக்குளி, காக்கா தீவு கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்டது. கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை […]

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிரடி தகவல்

மார்ச் மாதத்தின் முதல் 6 வாரங்க்களுக்குள் இலங்கைக்கு 24,3363 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 5,783 ஆகும். நேற்று இரவும் சீன சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள 7 நாட்கள் இலங்கையில் சுற்றுலா செய்யவுள்ளனர். அதேபேல் சீனாவின் இஸ்டன் விமான சேவை இலங்கைக்கு வாரத்தில் 6 விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

பெருந்தோட்ட மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என ஐக்கிய மக்;கள் முன்னணியின் தலைவர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (10) நடைப்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே இராஜாங்க கல்வி அமைச்சர் இதனை கூறினார். தற்போதைய நிலையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்துவதை காட்டிலும் மாகாண சபைகளுக்கான தேர்தலை வலியுறுத்துவதே அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்து […]

A/L பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும்

உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு விடயத்தையும் வரிப்பிரச்சினையுடன் சேர்த்து குழப்ப வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கல்வி அமைச்சர் […]

நடுநடுங்கும் அரசாங்கம்

அரசாங்கம் தேர்தல் என்ற உடனேயே ஓடி ஒளிந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் M.உதயகுமார் இன்றைய பாராளுமன்றில் தெரிவித்துள்ளார. “ஒரு சிறிய உள்ளூராட்சி தேர்தலை கண்டு நடுநடுங்கும் அரசாங்கத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறோம் அரசாங்கம் தேர்தல் நடத்த தவறினாலும் நீதித்துறையின் அழுத்தம் காரணமாக தற்போது ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஜனாதிபதி பாராளுமன்றில் தேர்தல் குறித்து […]

தேர்தலுக்கு பயமில்லை முடிவுகளுக்கே பயம்

அரசாங்கம் தேர்தல் முடிவுகளுக்கு பயந்தே உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தவில்லை எனமக்கள் விடுதலை முன்ணணி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க் பாராளுமன்றில் இன்று (10) உரையாற்றறும் போது இதனை கூறினார். ஆகவே எப்படியாவது தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு, ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி

ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு, ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியிலும் நாட்டை சீர்குலைக்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் எமது நாட்டுக்கே பாதிப்பாக அமையும். எனவே, சந்தர்ப்பவாத அரசியலை விடுத்து, நாட்டை மீட்க எதிரணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்தார். வெற்றிபெற்றவரையும், முயற்சித்து தோல்வி அடைந்தவர்களையுமே வரலாறு நினைவில் வைத்திருக்கும். மாறாக வேடிக்கை பார்ப்பவர்களுக்கு […]