இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயார்

சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நோக்கிய இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் யெலன் கூறியுள்ளார் நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.  

கொட்டகலைக்கு விரைவில் தீயணைப்பு வாகனம்

கொட்டக்கலை பகுதிக்கு விரைவில் தீயணைப்பு கருவிகள் உட்பட தீயணைப்பு வாகனமொன்றினை ஜப்பான் அரசாங்கத்தின் உதவியோடு வழங்குவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கொட்டகலை நகரில்  இடம்பெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்ட போதே பின்வரும் விடயத்தை தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவரோடு அடுத்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அச்சந்தர்பத்தில் இவ்விடயத்தையும் முன்வைத்து கொட்டக்கலை பகுதிக்கு விரைவில் தீயணைப்பு வாகனத்தை பெற்று தருவதாக கூறியதோடு பாதிக்கப்பட்ட வர்த்தக ஸ்தாபனதற்கு […]

SLFP – பதில் பொதுச் செயலாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு சரத் ஏக்கநாயக்கவை (Sarath Ekanayake ) நியமித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர வௌிநாடு சென்றுள்ள காரணத்தினால் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாட்டில் இலங்கை தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இலங்கை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. மனித உரிமைகளை மீறல், பயங்கரவாத செயற்பாடுகள், நீதிமன்ற சுயாதீனம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான 52 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.

கொட்டகலையில் பகுதிநேர கடையடைப்பு

கொட்டகலை நகரில் 05ஃ03ஃ2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீ விபத்தின் போது தக்க தருணத்தில் தீயணைப்பு கருவிகள் இன்மையால் தீ ஏற்பட்ட கடையில் பொருட்கள் முற்றாக தீக்கரையாகியது. எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் கொட்டகலை பெற்றோலிய களஞ்சிய சாலையில் போதியளவு தீயணைப்பு கருவிகளை வழங்குமாறும் தீக்கரையான வர்த்தக நிலையத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் நோக்கிலும் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை நகரத்தில் கடைகள் அனைத்தும் திங்கட்கிழமை பகுதிநேரமாக கடைகள் அடைக்கப்பட்டது. இது தொடர்பில்  […]

மரக்கறி லொறி விபத்து

நுவரெலியா, லபுக்கல பகுதியில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (5) இடம்பெறுள்ளது. இதன்போது லொறியில் பயணித்த 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் நுவரெலியா, லபுக்கல தேயிலை […]

தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை

தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து நேற்று முன்தினம் (4) மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார். அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து, வேறொரு நபரை இரண்டாம் திருமணம் […]

கொட்டகலை தீ விபத்து

கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து 05.03.2023 அன்று இரவு 09.30 அளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் பசார் பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள தளபாட கடை மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. திம்புள்ள பத்தனை பொலிஸார், மற்றும் பிரதேச […]

யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் – CV

நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை நாம் புறநிலையாக பார்க்காமல், அடுத்த தேர்தலை கண்கூடாக பார்க்காமல் இருந்தால், பௌத்த மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக்கொண்டே இருப்பார்கள். நாட்டை முன்னேற்றவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அண்மைக்காலமாக மகாசங்கம் பற்றிய உங்களது கருத்துக்கள் சிங்களவர்கள் மத்தியில் எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மகா சங்கத்தினரை விமர்சிப்பது புத்திசாலித்தனமா? […]

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய கேஸ் 4,743 ரூபாவுக்கும் 5 கிலோ கிராம் எடையுடைய கேஸ் 1,904 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது. 2.3 கிலோ கிராம் எடையுடைய கேஸ் சிலிண்டர் 883 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.