Anura – Jvp

பொது மக்களின் வாக்கு உரிமையோடு விளையாடுவதை நிறுத்துமாறு JVP தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மொணராகலை பகுதியில் நேற்று (15) இடம்பெற்;ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசியல் யாப்புக்கு எதிராக செயற்பட முயற்சிக்கும் அரச பதிப்பாளர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருக்கு எதிராக தமது ஆட்சியில் வழக்கு தொடரப்படும் எனவும் அவர் கூறினார்.

20 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 10 கிலோகிராம் அரிசி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக் கொடுப்பதற்காக ஆகக்கூடியது 20 பில்லியன் ரூபாவுக்காயினும் போதுமானளவு நெல்லை கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். நெல் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று (14) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். […]

தபால் மூல வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்திரசேகரன் படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய எம்மவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு – ராதா

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரனின் படத்தை வைத்து பிரதேச சபை தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு மலையக மக்கள் முன்னணிக்கு மாத்திரமே உரிமையுள்ளது. மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலக்கப்பட்டவர்களோ அல்லது கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் யாரும் பயன்படுத்த முடியாதென மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் உள்ளூராட்சி சபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பல பகுதிகளில் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் ஆனால் கை சின்னத்தில் போட்டியிடும் […]

தேர்தல் நடத்த அரசாங்கம் விடாது

அரசை மீறி, தேர்தல் நடத்த ஆணைக்குழுவுக்கு சக்தி இல்லை. – மனோ கணேசன் “தேர்தல் நடத்த அரசாங்கம் விடாது. ஆகவே தேர்தல் நடத்த வேண்டுமானால், நீங்கள் தெருப்போராட்டம் செய்யுங்கள். வேறு மாற்று வழியில்லை.” இன்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா கட்சி பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்த செய்தியை தான் நான் புரிந்துக்கொண்டேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பிரகாரம், திறைசேரி செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமததாச

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்க தயார் என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமததாச தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அதேபோல் ஐ.ம.ச ஒரு போதும் வன்முறைகளுக்கு துணை போகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெடுமாறனுக்கு இராணுவம் பதில்…

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று உலகத் தமிழர்பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2009 மே மாதம் நடந்த உச்சகட்ட போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர்பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்றுகூறியதாவது: “பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை […]

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரச அச்சக அலுவலக தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதற்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் நானூற்று அறுபத்தொரு மில்லியன் ரூபா என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நாளை நடைபெறும் அரசியல் கட்சி செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு உடனடி நிவாரணம்

நெல் கொள்வனவு செய்ய மற்றும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவதற்கு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு ஓய்வூதியப் பணிக்கொடை நிலுவைத் தொகையை வழங்குவதற்கு போசாக்கின்மையை குறைப்பதற்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு- உடனடியாக நிதி வழங்க ஜனாதிபதி பணிப்புரை. தற்போதைய பொருளாதார நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, […]