தமிழ்முற்போக்குகூட்டணி-அமெரிக்க தூதுவர் குழு, நுவரெலியாவில் சந்திப்பு

மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ்முற்போக்குகூட்டணி குழுவினரை, நுவரெலியாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி செங் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவில், வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்பி, எம். உதயகுமார் எம்பி, எம். பரணீதரன், ஆர், ராஜாராம், விஸ்வநாதன் ஆகியோரும், அமெரிக்க தூதுவர் குழுவில், அரசியல் துறை பொறுப்பாளர் ரூபி, யூஎஸ்எயிட் துணை பணிப்பாளர் டிம் ஆகியோரும் அடங்குகின்றனர்.

நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கம்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான ஒரு குறுகிய கால உத்தியாகவே தனிநபர் வருமானம் அடிப்படையில் வரி விதிப்பு செய்யப்படுவதாகவும் இப்புதிய வரி விதிப்பு முறை ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சதவீதமென்றும் நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க தெரிவித்தார். புதிய வரி அறவிடும் முறை தொடர்பில் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு, சில நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான […]

75 ஆவது சுதந்திர தின அரச விழாவின் செலவுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை

75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அரச விழாவைப் புறக்கணிக்குமாறு மக்களை கட்டாயப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போலிப் பிரச்சாரங்கள் குறுகிய அரசியல் செயல்முறையின் மற்றொரு தொடர்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது. பொய்யான தகவல்கள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்தி, அரசாங்கத்தை மக்கள் வெறுக்கச் செய்வதும், அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதன் […]

சேவையை முடித்த பல்கேரியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கான பல்கேரியத் தூதுவர் திருமதி எலேனோரா டிமிட்ரோவா (Eleonora Dimitrova) இலங்கையில் தனது சேவையை முடித்துக் கொண்டு தனது நாட்டுக்கு செல்வதற்கு முன்னர் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். எலினோராவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கைக்காக அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டியதுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார். எதிர்காலத்திலும் இலங்கைக்கு அனைத்து விதமான ஆதரவையும் வழங்குவதாக எலினோரா தெரிவித்தார்.

JVP

நாட்டை கட்டியெழுப்ப கல்வியால் மாத்திரமே முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். ஆகவே எதிர்வரும் தேர்தல் இதற்கு முக்கியம் எனவும் அவர் கூறினார்.

Sajith – SJB

மக்கள் மீது வரியை சுமத்துவதை கைவிட்டு இதுவரை கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நிச்சயம் திருடர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் தேர்பவனி

நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் நேற்று தைப்பூசத்தினை முன்னிட்டு தேர்பவனி சிறப்பாக இடம்பெற்றது. இந்த தேர் பவனியினை முன்னிட்டு விநாயகர் வழிபாடு,திரவிய அபிசேகம், அலங்காரபூஜை, வசந்த மண்டப பூஜை ஆகியன இடம்பெற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமானின்  வீதி உலாவும் இடம்பெற்றது. இந்த தேர் பவனி அட்டன் சிவ சுப்பிரமணிய தேவஸ்த்தானத்தில் ஆரம்பித்து ஹட்டன் சுற்றுவட்ட வீதி ஊடாக பண்டாரநாயக்க டவுன் வரை சென்று மீண்டும் திரும்பி பிரதான வீதி […]

இ.தொ.கா

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் பிரச்சாரத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது. இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும், தேர்தல் பிரச்சார ஆரம்பக்கூட்டமும் கொட்டகலை சீ.எல்.எப் மண்டபத்தில் நேற்று (06) நடைபெற்றது. இதன்போது, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், எம்.பியுமான மருதபாண்டி ராமேஸ்வரன், சிரேஷ்ட உறுப்பினர் அனுசியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், இ.தொ.காவின் உப தலைவர்கள் மற்றும் […]

உழவு இயந்திரம் ஆற்றில் பாய்ந்து விபத்து

அட்டன் – டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்று (06) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தொழிற்சாலைக்கு விறகு ஏற்றிக்கொண்டிருந்த போது திடீரென் உழவு இயந்திரம் தானாக இயங்கி முன்நகர்ந்துள்ளது. இதன் போது சாரதி உழவு இயந்திரத்தினை நிறுத்துவதற்கு இயந்திரத்தில் ஏறிய போது தடுக்கி விழுந்தாகவும் அதனை தொடர்ந்து […]

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வரவு செலவு திட்டத்தில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை சேர்ப்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் மேற்படி குறிப்பிட்டனர். காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நிலைபேண்தகு பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆனந்த மலவிதந்திரி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி […]