அதிகமான தோட்டங்களில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படுவதில்லை.! திருமுருகன் குற்றஞ்சாட்டு!

  (  நூரளை பி. எஸ். மணியம்) இந்த நாட்டிலுள்ள பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்கள் தொழிற்சங்க சட்டத்தையும் கூட்டு ஒப்பந்தத்தையும் மீறி செயல்படுகின்றார்கள். இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இதிலிருந்து மீள்வதற்கு பெருந்தோட்ட தொழிலாளர்களும் பெருந்தோட்ட தொழிற்சங்க அரசியல் கட்சிகளும் தங்களது தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும். என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தமிழ் பிரதிநிதிக்குழு தலைவரும் இக்கட்சியின் நுவரெலியா அமைப்பாளர் கலாநிதி  […]

ஆட்டோக்காரர்கள் பயணிகளிடம் அநியாயமாக பணம் அறிவிடுவதாக குற்றச்சாட்டு! புதிய சட்டம் உருவாக்க வேண்டும்!

நாட்டில் இயங்கிவரும் முறைசாரா முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையினால் சில முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அநியாயமாக பணம் அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலைமைகளை தவிர்க்க உரிய அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதமஸ்தானத்தை தரிசிக்க ரயிலில் வரும் பக்தர்களிடம் முச்சக்கரவண்டி சாரதிகள் அநியாயமாக பணம் […]

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை த.மு.கூட்டணி நழுவ விட்டிருக்க கூடாது! புத்திரசிகாமணி

(  நூரளை பி. எஸ். மணியம்) எமது சமூகத்திற்கு நன்மை கிடைக் குதோ அல்லது கிடைக்கவில்லையோ கிடைக்கும் சந்தர்ப்பத்தை நலுவவிட கூடாது. புத்திரசிகாமணி கூறுகின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மலையக சமூதாயத்தின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு அழைப்பு விடுத்ததிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் என்ற முறையில் இந்த சந்தர்ப்பத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியினர் விட்டுக்கொடுத் திருக்க கூடாது. ஏனென்றால் மிக முக்கியமாக விடுதலை புலிகளுக்கு கிடைத்த பல சந்தர்ப்பத்தை விட்டுக் கொடுத்த அந்த […]

கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் இடம்பிடித்த இலங்கை இளைஞர்!

நூருல் ஹுதா உமர் கத்தார் சபாரி மால் நடாத்திய மாபெரும் புகைப்பட போட்டியான “FRAMES SEASON 6” இல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனும் தலைப்பின் கீழ் போட்டி நடத்தப்பட்டது. இதில் இலங்கையில் கண்டி மாவட்டம் வடதெனிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஹூபைப் முஸம்மிலின் புகைப்படம் தெரிவு செய்யப்படுள்ளது. இவர் தன் சிறு வயதிலிருந்தே புகைப்பட துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் பல […]

பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு சத்துள்ள உணவு வழங்கும் வேலைத்திட்டம்!

(  நூரளை பி. எஸ். மணியம்) பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு சத்துள்ள உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். என பாரத் அருள்சாமி தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் உணவு பாதுகாப்பு விஷேட வேலைத்திட்டத் தின் கீழ் மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் எண்ணக்கருவின் அடிப்படையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாம் உணவு பாதுகாப்பு மற்றும் போஷனை மட்டத்தை அதிகரித்தல் வேலைத் திட்டம் , ஐக்கிய நாடுகளின் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் […]

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் சீருடை அறிமுக நிகழ்வு.!

நூருல் ஹுதா உமர், யூ.கே. காலித்தீன்- சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் சீருடை அறிமுக நிகழ்வு சாய்ந்தமருது கமு/கமு/றியாழுல் ஜன்னா வித்தியாலத்தில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை சாய்ந்தமருது கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.சலீம் (ஸர்க்கி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான ஏ.எஸ். அஸ்வரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேரவைக்கான சீருடையினை அறிமுகம் செய்து […]

மாத்தளை ரத்வத்தையில் அநாதவரான தொப்புள்கொடி உறவுகளை காப்பாற்றுவோம் ! வடிவேல் Mp

மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் அநாதவரான குடும்பங்களுக்கு அதே இடத்தில் வீடு, அத்துடன் தோட்டத்தின் உதவி முகாமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பேன் என இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் கூறுகிறார். இன்று காலை  கொழும்பில் ஒலிப்பரப்பாகும் சூரியன் Fm வானொலிக்கு அளித்த பேட்டியிலேயே இதனை பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறினார். தமது தொப்புள் கொடி உறவுகளுக்கு ஏற்பட்ட இன்னல்களை அறிந்தும்  கவைப்பட்ட அவர்  எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்  […]

மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் உதவி முகாமையாளரின் அடாவடி!14 பேர் நிர்கதியில்,8 எம்.பிகளே என்ன செய்ய போகிறீர்கள்? மூத்த அரசியல்வாதி சிவலிங்கம் கேள்வி!

எல்கடுவ பெருந்தோட்டத்துக்குச் சொந்தமான மாத்தளை ரத்வத்த கீழ் பிரிவில் பிரிட்டிஷ் நிர்வாகம் கட்டிக்கொடுத்த வரிசை முகாமில் (LINE CAMP) 14 குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து வாழ முடியாத நிலையில் முகாமையாளரின் அனுமதியுடன் கட்டிய வீட்டை அதே நிக்வாகம் உடைத்து நிர்மூலமாக்கியதை எமது  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எட்டு பேரும். அறிவீர்கள் என மூத்த அரசியல்வாதியும் மத்திய மாகணத்தின் முன்னாள் பிரதி தலைவருமான முருகன் சிவலிங்கம் தனது ஆதங்கத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும் கம்பெனிகளுக்கு  இந்த அதிகாரத்தை அரசாங்கமே கொடுத்துள்ளது. […]

யால வன பூங்காவிற்கு அமெரிக்க தூதுவருடன் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார்.இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்களும்  இந்த விஜயத்தில் கலந்து கொண்டார். யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (19) யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார்.இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டார். யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான […]

அம்பாறை மாவட்ட ஊடக போரத்தின் 6 வது மாநாடு அக்கரைப்பறறில் நாளை! நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுமா?

(இப்னுஷெரீப்) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் 06 ஆவது வருடாந்த மாநாடு நாளை(20) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது. போரத்தின் தலைவர் கலாபூசனம் எம்.ஏ.பகுர்டீன் தலைமியில் அக்கரைப்பற்று எய்ம்ஸ் சர்வதேசப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ள இம்மாநாடு மூன்று அமர்வுகளைக் கொண்டதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர்  எம்.எஸ்.எம்.ஹனீபா தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர் போரத்தின் மாநாட்டில் நடப்பு ஆண்டுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவும்  இடம்பெறவுள்ளதால் அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு […]