மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உதவ ஜப்பான் உறுதி!

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), உறுதியளித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானைஜப்பான் தூதுவர் மற்றும் JICA நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்   அமைச்சர் ஜீவனின்  தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் தொடர்பாக அவரது […]

சட்டவிரோதமாக எந்த இன மக்கள் செயற்பட்டாலும் எதிர்த்து குரல் கொடுப்பேன்! சாணக்கியன் சபதம்!

சட்டவிரோதமான செயல்படும் அனைத்து இன மக்களின் செயற்பாடுகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பேன், இதில் நான் பாகுபாடு பர்க்கப்போவதில்லை  என பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் கூறியுள்ளார். சட்டவிரோதமாக யார்  செயற்பட்டாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதாவது சட்டவிரேதமாக எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும் அது தவறு என்பதே […]

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த சிங்களக்குடும்பங்களுக்கு  தியாகி ஐயாவின் உதவி :

எஸ்.எம்.எம்.முர்ஷித். அனுராதபுரம் -மிகிந்தலை தம்மன்னாவ பிரதேசத்தில் கடந்த 11.08.2023 ஆந் திகதி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மூன்று குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ள சோகச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பிரதேச வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்களாவர். 8, 12 வயதுடைய ஆண், 14 வயதுடைய பெண் பிள்ளையின் தந்தை தர்மசிரி ரணதுங்க (வயது 43), 22 வயதுடைய பெண் பிள்ளை, 14, 07 வயதுடைய ஆண் பிள்ளைகளின் தந்தை எஸ்.மஹிந்த குமார (வயது 45), […]

கிழக்கு மாகணத்தில் மதங்களின் ஒற்றுமையை காக்க வேண்டியது என் பொறுப்பு! விகாராதிபதிகளை சந்தித்த ஆளுநர் தெரிவிப்பு!

சந்திரகுமார். நிலாவெளியில் அமைக்கப்படவிருந்த விகாரை தொடர்பாக, உரிய விகாரைகளுக்கு சென்று, அங்குள்ள விகாராபதிகளை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்துள்ளார். விகாராதிபதி மைத்திரி மூர்த்தி மஹாநாயக்க தேரர் மற்றும் விகாராதிபதி ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ச மஹாநாயக்க மஸ்த்ரவில அமரபுர மூலவன்ச பார்சவய  தேரர்களிடம் ஆசியை பெற்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது விளக்கத்தை கூறி இருக்கிறார். திருகோணமலை நிலாவெளி இழுப்பை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த […]

மட்டக்களப்பில் சர்வதேச இளைஞர் தின நிகழ்வு.

(இப்னு ஷெரீப்) சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண இளைஞர் தின நிகழ்வு அண்மையில்  புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில்(தேசியப் பாடசாலை) நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எம்.பி.சரத் சந்ரபால தலைமியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம வளவாளராக மட்டக்களப்பு உயர்  தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் பணிப்பாளர் எஸ்.ஜயபாலன் கலந்து கொண்டு சர்வதேச இளைஞர் தினத்தின் முக்கியத்துவம், மற்றும் தொழிற்திறன்கள்  பற்றி விரிவுரையாற்றினார். இந்நிகழ்வில் […]

கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்” பரிசளிப்பு விழா!

C..G .பிரசாந்தன், எம் நாசார் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை “கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்” 2022 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்றைய தினம் அதிபர் திருமதி. V. சாந்தினி சர்மா அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு வலயக் கல்வி பணிப்பாளர் . P.R. தேவபந்து அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக, பிரதிக் கல்வி பணிப்பாளர் . K. ரஞ்சித் பிரேமதிலக்க மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா […]

அம்பாறை கடல் வலைகளில் அதிகளவான கீரி மீன்கள்! மீனவர்கள் கொண்டாட்டம்

(இப்னு ஷெரீப்) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது,  காரைதீவு உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களில் நீண்டகாலத்திற்குப் பின்னர் கரைவலைக்கு அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இப்பிரதேசங்களில் ஏற்பட்ட பாரிய கடலரிப்பு மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக மீன்பிடித் தொழில் முற்றாக செயலிழந்திருந்தது.  இதனால் இத்தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவருகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அதிகளவான கீரி மீன்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் கரைவலை மீன் […]

“ஐ”க்குள் “கை” வைத்த லைக்கா! 2 வருடங்களுக்கு ஒளிப்பரப்பு நேர குத்தகை – பந்துல்ல நம்பிக்கை!!

இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் கீழ் இயங்கும் செனல் “eye”  நிறுவனத்தை லைக்கா நிறுவனத்திற்கு குத்தகை   கொடுக்க போகும் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என  ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து , பெருந்தெருக்கல் அமைச்சர்  பந்துல்ல குணவர்தன கூறுகிறார். கொழும்பில்த நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதன கூறினார். மேலும் நட்டத்துடன் இயங்கும்  குறிப்பாக மின்சார கட்டணம் கூட செலுத்த முடியாத  செனல் eye நிறுவனத்தை விற்கவோ குத்தைக்கு கொடுக்கவோ நான் முயற்சிக்கவில்லை. […]

உழைக்கும் மக்களின் உரிமைகளை அழிக்கும் அரசாங்கத்துடன் சம்பந்தம் செய்பவன் நான் இல்லை!! சஜித்

நலீர் அகமட் உழைக்கும் மக்களின் உரிமைகளை அழிக்கும் அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார். மக்களைக் கொல்லும்,மக்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ இல்லை என்றும்,தீவிர இடதுசாரி அல்லது தீவிர முதலாளித்துவ கொள்கையை விடுத்து மூன்றாவது வழியை பின்பற்றும் கட்சியாக இந்நாட்டு மக்களின் மனித உரிமைகள் மட்டுமன்றி பொருளாதார,சமூக மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாத்துக் […]

கொழும்பில் சிறப்பாக நடந்த “ஹிஜ்ரத்” கவி அரங்கு

எம நாசர் . தாருல் ஈமான் இலக்கிய வட்டம் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி – கொழும்பு பிராந்தியம். ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த  “ஹிஜ்ரத்” கவியரங்கம்  நேற்றைய (15-08-2023,) தினம் இடம்பெற்றது   கொழும்பு, தெமட்டகொட வீதியிலுள்ள தாருல் ஈமான் (இஸ்லாமிக் புக் ஹவுஸ்) கேட்போர்கூடத்தில் நடைப்பெற்ற கவியரங்கிற்கு சிரேஷ்ட சட்டத்தரணியும் இலக்கியவாதியுமான கலாபூஷணம். ரஷீத் எம் இம்தியாஸ் தலைமை தாங்கினார். கவியரங்கில் கவிஞர் ரவூப் ஹஸீர் (கொழும்பு) கவிஞர் கஸ்ஸாலி அஷ் ஷம்ஸ் […]