நலப் பயனாளிகளுக்கு அறிவிப்பு
நலப் பலன்கள் சட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என சமூக நலப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது. 25 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் 100 வீதமான தெரிவுக்குழு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் குறிப்பிட்டார். பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும் என பி. விஜயரத்ன மேலும் தெரிவித்தார்.
IPL முடிவில் பத்திரணவுக்கு கிடைத்த மற்றுமொரு இடம்
2023 IPL போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை பிரபல விஸ்டன் பத்திரிக்கை பெயரிட்டுள்ளது. அந்த அணியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷ பத்திரனவும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். விஸ்டன் இதழால் பெயரிடப்பட்ட 2023 ஐபிஎல் அணி கீழே… ஃபாஃப் டு பிளெசிஸ் (RR) யஷஸ்வி ஜெய்ஸ்வால் (RR) சுப்மன் கில் (GT) சூர்யகுமார் (MI) ஹென்ரிச் கிளாசென் (SRH) ரிங்கு சிங் (KKR) ரவீந்திர ஜடேஜா (CSK) ரஷித் […]
மதீஷ பதிரணவுக்கு வாய்ப்பு
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அணிக்கு துமித் கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த குழாமில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பதிரண இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் […]
வெற்றியை கண்ணீருடன் கொண்டாடினார் தோனி
மகேந்திர சிங் தோனி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் தனி இடத்தை பிடித்துள்ளார். நேற்று, தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக IPL கிண்ணத்தை வென்றதும் தோனி பற்றிய உலகப் பேச்சு உச்சத்தை எட்டியது. இதேவேளை, ஒரு பேட்ஸ்மேனாக, வழமையான பாரிய தாக்குதல்களுக்கு செல்லாவிட்டாலும், கேப்டனாகவும், விக்கெட் காப்பாளராகவும் தனது பொறுப்பை, போட்டி முழுவதும் திறமைக்கு ஏற்றவாறு நிறைவேற்றினார். மிகவும் அமைதியான கிரிக்கெட் கேப்டனாக தோனி அனைவரிடமும் பிரபலமானார். உலகக் கிண்ண […]
மொஸ்கோ மீது தாக்குதல்…
ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நகரில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல ஆளில்லா விமான தாக்குதல்கள் வான் பாதுகாப்பு சாதனங்களால் தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யாவின் தலைநகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSKக்கு 20, GTக்கு 13
10வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 5வது முறையாக IPL சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. 2 ஆண்டு தடை காரணமாக இதுவரை 14 சீசனில் மட்டுமே பங்கேற்று இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல்.சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. அந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்து, கிண்ணத்தை […]
சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி பாடசாலைகளுக்கு இனியும் அநீதி இடம்பெறக் கூடாது : கல்வி இராஜாங்க அமைச்சர்
சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான பெற்றிடங்களை நிரப்பும் போது தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை அங்கிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அதிருப்திகளில் இருந்து உறுதியாகியுள்ளது. ஆகவே இனி வரும் காலங்களில் இவ்வாறு பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் செயற்றிட்டத்தில் மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் தமிழ் மொழி மூலமா மான அதிகாரிகளை உள்வாங்கி அவர்களது ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் […]
நாளை முதல் பொசன் வாரம்…
நாளை (31) முதல் பொசன் வாரம் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, மிஹிந்தலை. தந்திரிமலை உள்ளிட்ட இடங்களை மையப்படுத்தி எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார். பொசன் வாரத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில் இறைச்சிக் கடைகளை மூடுமாறு உள்ளுராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தப் பகுதிகளுக்கு மதுபானம் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் மக்களைக் கோருவதாகவும் தெரிவித்தார்.
தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்?
தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கான விசேட கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய வரைவை உருவாக்குவதற்கு தொழிற்சங்கங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். அதற்கமைய, நாட்டின் எந்த பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘101 கதா’ நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே […]