இலங்கைக்கு “KA350 King Air” விமானம்
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வழங்குவது தொடர்பாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neil) அளித்த கடிதம், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டெபன் இனால், அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பீச் கிராப்ட் “KA350 King Air” என்பது நவீன […]
மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உப குழு
மேல்மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் மேல்மாகாணத்தை முறையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக விரிவான அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, முறைசாரா நகர அபிவிருத்தி, பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத நிலைமையாக மாறும் எனவும் சுட்டிக்காட்டினார். மேல்மாகாண […]
தொழிலாளர்களை கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது VS எச்சரிக்கை
கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக நிவ்பர்க் தோட்ட காணியை அத்துமீறி கைப்பற்றுவதற்க்கு வெளியார் உட்புகுந்துள்ளனர் தோட்ட நிர்வாகத்தின் உத்தரவுடன் இளைஞர்களும் தொழிலாளர்களும் அவர்களை விரட்டுவதற்கு சென்றிருந்தபோது அங்கு நடைபெற்ற கைகலப்பில் ஒரு சிலர் காயத்துக்கு இலக்கானதோடு அப்பாவி தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் . சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்… அரசாங்கம் […]
முதற்கட்ட இலங்கை அணி
உலகக் கிண்ண தகுதிச் சுற்று மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிகளுக்கான 30 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இலங்கை அறிவித்துள்ளது. 7 பேட்ஸ்மேன்கள், 9 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 8 ஆல்-ரவுண்டர்கள் அடங்கிய ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான ஆரம்ப அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று விக்கெட் கீப்பர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். T20 உலகக் கிண்ணப் போட்டியில் காயமடைந்த துஷ்மந்த சமிர 7 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை அணிக்கு […]
கல்வி அமைச்சு மீது குற்றச்சாட்டு
பாடசாலைகளைச் சுற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் உரிய பணியாளர்கள் இன்மையால் பாடசாலை தொடர்பான துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அந்த பாடசாலைகளுக்கு அருகில் கழிவுகள் குவிந்து டெங்கு நுளம்புகள் பரவுவது அதிகரித்துள்ளதாகவும்இ இது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை சுதந்திர ஆசிரியர் […]
காஸா பகுதியில் போர் நிறுத்தம்?
காஸா பகுதிக்கு போர் நிறுத்த காலம் அறிவிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 5 நாட்களாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்த நிலையில் நேற்று (13) இரவு 10 மணியளவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், போர் நிறுத்தம் தொடங்கிய போதும் இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இரு தரப்பினரும் வான் தாக்குதல்கள் மற்றும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு […]
எவரிடத்திலும் மண்டியிட வேண்டியதில்லை. – ஜனாதிபதி
இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, “நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது” என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை வோடர்ஸ் ஹெட்ஜில் நடைபெற்ற பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். “எமது நாடு பல துரதிஷ்டமான யுகங்களை கடந்து வந்துவிட்டது. இளையோரின் கலவரங்களை கண்டது, முப்பது […]
இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஐக்கிய இராச்சியம் ஒப்பந்த அடிப்படையில் ஆதரவளிக்க வேண்டும்
ஐக்கிய இராச்சியம் இலங்கை போன்ற நாடுகளுடன் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் மெத்திவ் ஆஃப்போர்ட் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஐக்கிய இராச்சியம் ஒப்பந்த அடிப்படையில் ஆதரவளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிரித்தானியா வழங்கிய உதவிகள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விசேட அமர்வு இடம்பெற்றது. இதன்போது கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி மெத்திவ் ஆஃப்போர்ட் இதளை கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பதுளை, ஹாலி – எல பகுதியில் வேன் விபத்து- 11 வைத்தியசாலையில்
பதுளை, ஹாலி – எல பகுதியில் நடனக் குழுவை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வேனை நடனக் குழுவின் உரிமையாளரே ஓட்டிச் சென்றதாகவும், அவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வேன் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட எட்டு சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்கள் மற்றும் […]
கொலம்பியாவில் கொக்கைன் நீர்மூழ்கிக் கப்பல்…
இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 03 தொன் கொக்கெய்ன் போதைப்பொருள் பொதி செய்யப்பட்டிருந்ததுடன் அதன் பெறுமதி 103 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பிய நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத அளவுக்கு அதிகமான போதைப்பொருள் அடங்கிய நீர்மூழ்கிக் கப்பலை கொலம்பிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 30 மீற்றர் நீளமும், மூன்று மீற்றர் அகலமும் கொண்ட இந்த பிரமாண்டமான கப்பலை பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லும் போது, மூன்று கொலம்பியர்கள் கையகப்படுத்தியுள்ளனர். 1993ஆம் ஆண்டு முதல் […]