1st Test, Christchurch
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறைஸ்ட் சேர்சில் இடம்பெறுகின்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சம் சிறிய ஓய்வுக்கு பின்னர் விளையாடுகின்றார்.
இந்து ஆலயங்களுக்கான காசோலைகள்
சஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக இந்து ஆலயங்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஷ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. கையப்புகலை ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்டங்களில் உள்ள ஆலயங்களின் புணர்நிர்மான பணிகளுக்கான நிதி வழங்கி வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் இ.தொ.கா வின் கொத்மலை பிரதேச அமைப்பாளர் மூர்த்தி, கொத்மலை பிரதேச […]
கொட்டகலைக்கு விரைவில் தீயணைப்பு வாகனம்
கொட்டக்கலை பகுதிக்கு விரைவில் தீயணைப்பு கருவிகள் உட்பட தீயணைப்பு வாகனமொன்றினை ஜப்பான் அரசாங்கத்தின் உதவியோடு வழங்குவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கொட்டகலை நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்ட போதே பின்வரும் விடயத்தை தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவரோடு அடுத்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அச்சந்தர்பத்தில் இவ்விடயத்தையும் முன்வைத்து கொட்டக்கலை பகுதிக்கு விரைவில் தீயணைப்பு வாகனத்தை பெற்று தருவதாக கூறியதோடு பாதிக்கப்பட்ட வர்த்தக ஸ்தாபனதற்கு […]
கச்சதீவு திருவிழா (Photos navy.lk)
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது. யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று இரவு விசேட ஆராதனை இடம்பெற்று சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது. திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று காலை 6 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்று, 6.30 ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு 7 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இன்றைய திருவிழா திருப்பலி கொழும்பு […]
நீதி அதன் கடமையை செய்யும்
கிரேக்கத்தில் பதிவான மிகவும் துயரமான பேரழிவுகளில் ஒன்றான 43 உயிர்கள் காவு கொள்ளப்பட்ட ரயில் விபத்து ஒரு ”மனிதத் தவறு” என அந்நாட்டு பிரதமர் Kyraikos Mitsotakis தெரிவித்துள்ளார். கிரேக்கத்தில் ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தை சென்று பார்வையிட்டதன் பின்னர் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதேநேரம், அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் பதவி விலகியுள்ளார். நேற்று முன்தினம்(28) கிரேக்கத்தின் வட பகுதியில் 350 பயணிகளுடன் பயணித்த ரயிலொன்று […]
SLC
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்க் சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நேற்று பிற்பகல் நிறைவடைந்துள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட்க் சபைக்கான தேர்தல் எதிர்வரும் மே 20 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது. இதன்போது 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுச் செய்யப்படவுள்ளனர்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
(அந்துவன்) மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் நுவரெலியா – கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று (26) காலை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கந்தப்பளை பிரதேச பொதுமக்களுடன் இணைந்து, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள், எதிர்ப்புகளை பதாகைகளை ஏந்தியவாறு […]
சிறந்த கொழுந்து பறிப்பாளர் போட்டி
(அந்துவன்) ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுள், சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவுசெய்வதற்கான இறுதி போட்டி நானுஓயா – ரதல்ல, தேயிலை மலையில் நேற்று (25) நடைபெற்றது. ஹொரண, தலவாக்கலை மற்றும் கெலனிவெலி பெருந்தோட்ட நிறுவனங்களில் கீழ் உள்ள 60 தோட்டங்களில் ஆரம்பக்கட்ட போட்டிகள் நடைபெற்று, அவற்றில் வெற்றிபெற்றவர்களில் இருந்து 42 பெண் தொழிலாளர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். 20 நிமிடங்கள் வழங்கப்பட்டு, இக்காலப்பகுதிக்குள் கூடுதல் கொழுந்து பறிப்பவர் வெற்றியாளராக தெரிவுசெய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் […]
Blue Mountation – விளையாட்டு கழகம்
பண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ் Blue Mountation விளையாட்டு கழகம் நடத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி இன்று நடைபெறவுள்ளது. காலை 9.30க்கு ஊவா- ஹைலண்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. காலையில் மழை பெய்த போதிலும் இப்போது சீரான காலநிலைமை நிலவுவதால் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
தனது கனேடிய குரியுரிமையை துறக்க முடிவு – அக்ஷய்
பிரபல இந்திய நடிகரான அக்ஷய் குமாருடைய குடியுரிமை குறித்து அவ்வப்போது சர்ச்சை எழும். அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்ஷய். நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியன், எப்போதுமே இந்தியனாகத்தான் இருப்பேன் என்று கூறியிருந்தார் அக்ஷய். சில வருடங்களுக்கு முன், என்னுடைய 14, 15 படங்கள் தோல்வியடைந்துவிட்டன என்று […]