பேராசிரியர் ஜி.எல் பீரிசை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க கட்சியின் நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், அண்மையில் கூடிய தமது கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஜி.எல். பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்கவில்லை எனவும் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே அந்த பதவிக்கு பொருத்தமான பெயர்களை பரிசீலித்து வருவதாகவும் கட்சியின் செயலாளர் கூறியுள்ளார்.