3,400 பேரை பலி வாங்கிய நிலநடுக்கம்
துருக்கி எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 3,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தில் 3,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல்
உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நவீன டாங்கிகள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவானது, அவர்கள் இந்த போரில் நேரடியாக பங்கேற்பதாகவே அர்த்தம் என ரஷியா எச்சரித்துள்ளது. இந்நிலையில், நவீன டாங்கிகள் அனுப்பப்படும் என அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அறிவித்த 24 மணி நேரத்துக்குள் உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 11 பேர் பலியாகினர் என சர்வதேச ஊடகங்கள் […]
A/L
2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை (A/L) இன்று (23) ஆரம்பமாகவுள்ளது. 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இந்த முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. இன்று (23) ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைடையவுள்ளது.
இந்திய அணி 8 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றியை பெற்றுள்ளது. ராய்பூரில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்றியில் வென்று முதலிலில் களதடுப்பில் ஈடுப்பட்டது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் 10 ஓவர்களுக்குள் முன்னிலை வீரர்களை பறிகொடுத்து தடுமாறியது. எனினும் அணியை போராடி மீட்ட கிளேன் பிலிப்ஸ் (Glenn Phillips ) 52 பந்துகளில் அதிகூடிய 36 ஓட்டங்களை பெற்றார் இறுதியில் நியூசிலாந்து […]