ஜனாதிபதி தேர்தல் பற்றி SJB முடிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைக்க சமகி ஜன பலவேக (SJB) தீர்மானித்துள்ளது. கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில்இ சமகி ஜன பலவேகய தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்கிஇ எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளைஇ கட்சி செயற்குழுவின் தீர்மானங்களை எதிர்க்கும் எவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்படவுள்ள அரசியல் மாற்றம் – அனுர
ஜனாதிபதிக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது
அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காரணம் இது தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் ஒன்று இல்லை என மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் சுற்றுலாதுறையை வலுப்படுத்த எந்தவித திட்டமும் இருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களுக்கு விவசாயிகளினள் துக்கத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை
தற்போதைய ஆட்சியாளர்களுக்கு விவசாயிகளினள் துக்கத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கல்கமுவ பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர் எதிரணியில் இருந்தும் மக்களுக்கு சேவையாற்றும் ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என தெரிவித்தார். அரசாங்கத்திற்கு மக்கள் துயரங்களை புரிந்துக் கொள்ளும் நரம்புகள் வெட்டப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமததாச
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்க தயார் என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமததாச தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அதேபோல் ஐ.ம.ச ஒரு போதும் வன்முறைகளுக்கு துணை போகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sajith – SJB
மக்கள் மீது வரியை சுமத்துவதை கைவிட்டு இதுவரை கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நிச்சயம் திருடர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.