தீக்ஷன முன்னேற்றம்

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகிஷ் தீக்ஷன T20 தரவரிசையில் முதல் 10 வீரர்களுக்குள் ஒருவராக இடம்பிடித்துள்ளார். ICC தரவரிசைக்கு கூடுதலாக, மகேஷ் தீக்ஷன T20  பந்துவீச்சாளர்களில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்து அணியுடனான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 3 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 2020 பந்துவீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்திலும், வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இலங்கை மகளீர் அணி புறப்பட்டது

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை மகளீர் அணி இன்று அதிகாலை 4 மணியளவில் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. 15 வீராங்கனைகளும், 10 ஊழியர்களும் தென்னாபிரிக்கா நோக்கி பயணித்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இந்த முறை T20 உலகக் கிண்ண தொடரல் இலங்கை மகளீர் அணி குழு “A”யில் இடம்பெற்றுள்ளது. இலங்கை வீராங்கள் பங்கேற்கும் முதல் போட்டி, போட்டிகளை ஏற்று நடத்தும் தென்னாபிரிக்க மகளீர் அணியுடன் இடம்பெறவுள்ளது. இந்த […]

இந்திய மகளிர் அணி

தென் ஆப்பிரிக்காவின் சென்வெஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 17.1 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் […]

T20 ஆடவர் மற்றும் மகளீர் உலக அணி

2022 ஆம் ஆண்டுக்கான T20 ஆடவர் மற்றும் மகளீர் உலக அணிக்கு இலங்கை வீர மற்றும் வீராங்கனை இருவர் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதன்படி ஆடவர் அணிக்கு இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும் மகளீர் அணிக்கு இனோகா ரணவீரவும் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆடவர் T20 அணிக்கு தலைவராக ஜோஸ் பட்லர் செயற்படவுள்ள நிலையில் மகளீர் அணிக்கு நியூசிலாந்து வீராங்கனை சோபி டிவைன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.