“We’re waiting for you” – மெசிக்கு உயிர் அச்சுறுத்தல்
உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் லியனோல் மெசியின் மனைவியின் குடும்பத்தினரின் வியாபார நிலையத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத போதும் துப்பாக்கிதாரி “மெசி நீ வரும் வரை காத்திருப்போம்” (“We’re waiting for you”) என எழுதி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 14 […]
South Africa won by 27 runs
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் (ODI) போட்டியில் தென்னாபிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நேற்றைய முதல் ODI போட்டியில் தென்னாபிரிக்க அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 299 என்ற இலக்கை நோக்கி பதிலளித்த இங்கிலாந்து சார்பில் ஜேசன் ரோய் 113 ஓட்டங்களை பெற்ற போதிலும் இலக்கை அடைய […]
மலையகம் சம்பந்தமாக ஆணைக்குழு ஒன்று அமைக்க வேண்டும்
” மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இது விடயம் சம்பந்தமாக ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டு அக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்வு அவசியம்.” – என்று இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
அட்டனில் இன்று (23.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.