அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும் வழங்கப்படுதல் அவசியம்

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற குறைந்த வருமானம் பெறும் 29 லட்சம் மக்களுக்கான அரிசி நிவாரணத்தில் கட்டாயமாக பெருந்தோட்ட மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும். இலங்கை நாட்டிலே உழைப்புக்கேற்ற ஊதியம் பெறப்படாமல் குறைந்த வருமானம் பெறுவது பெருந்தோட்ட மக்களே ஆகவே பெருந்தோட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்களிடமும் அரசாங்கத்திடமும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளேன் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மண்சரிவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பு கூற வேண்டும்

பூனாகலை கபரகலை தோட்டத்தில் மண்சரிவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பு கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை மாற்றத்தினால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகுவது பெருந்தோட்ட மலையக பகுதிகளே இதனை நன்கு அறிந்தும் நேற்றைய தினம் நடைபெற்ற மண்சரிவு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஏன் முன்னறிவித்தல் விடுக்கப்படவில்லை? இதனை பாரியதொரு குற்றமாகவே […]

மலையக மக்களின் எதிர்கால நலன்புரி வேலை திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம்…

சிங்கப்பூரில் நடைபெற்றும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் – ஆசியா பசிபிக் (ITUC-AP )பிராந்திய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் பங்கேற்றுள்ளார் இம்மாநாட்டில் மலையக மக்களின் எதிர்கால நலன்புரி வேலை திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌனிப்பது ஏன்? – VS

மலையகப் பெருந்தோட்ட நிலங்களை வெளியார் ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் தோட்ட நிர்வாகம் சட்டங்களும் கேடுபடிகளும் தொழிலாளர்களுக்கு மட்டுமா ? நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பதுளை நமுனுகலை இதகல தோட்டத்தினுடைய பெருந்தோட்ட காணிகளை பலவந்தகமாக வெளியார் ஆக்கிரமித்துள்ளனர் நிலைமை அறிந்தும் தோட்ட நிர்வாகம் மௌனம் காக்கின்றது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தங்களுடைய நலனுக்காக மலசல கூடத்தை விஸ்தரிக்கவோ அல்லது […]

VS அதிரடி (வீடியோ)

ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த சகல பொறுப்புகளில் இருந்தும் விலக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் அந்த கட்சிக்கு அறிவித்துள்ளதாக அவர் ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார். “இன்று மடுல்சீமை நகரில் ஒரு கூட்டத்தை சஜித் தலைமையில் ஒழுங்கு செய்திருந்தோம். ஆனால் சுகயீனம் காரணமாக தான் வரவில்லை என அவர் தெரிவித்தார். ஆனால் வெளிமடையில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு செல்வதை நான் கண்டேன். இதனால் எமது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கட்சியில் […]

மலையக மக்கள் தமது  இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்-VS

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை மலையக மக்கள் தமது  இருப்பை பாதுகாத்துக் கொள்ள பாவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரரும், LJEWU பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் முன்னணி ஊடகம் ஒன்றிடம் இதனை கூறியுள்ளா (மலையக தொழிலாளர்களின் இருப்பு கேள்விக்குறியாகி வருகின்றது. மலையக மக்கள் இன்று வரை அனைத்து உரிமைகளையும் போராடியே பெற்று வருகின்றனர. மாறாக எவரும் தட்டில் வைத்து கொடுக்கவில்லை. இன்று தோட்ட காணிகள் முறையாக பராமறிக்கப்படுவதில்லை. அதனால் பாம்பு, சிறுத்தை, குளவி […]