ராகலையில் சுற்றிவளைப்பு

ராகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட ஹைபொரஸ்ட்,ராகலை,உடபுஸல்லாவ நகரங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். இப்பரிசோதனையில் மக்கள் பாவனைக்கு உட்படுத்த முடியாத மற்றும் காலாவதியான பல உணவு பொருட்கள் மீட்கப்பட்டதோடு சுகாதாரம் இல்லாமல் உணவு பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு பல பயன்படுத்த முடியாத பொருட்களை சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது . நீலமேகம் பிரசாந்த்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை  ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படும். இக்கூட்டத்தொடர் முடிவடைந்து புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் சம்பிரதாயப்படி ஜனாதிபதியினால் அக்கிராசன உரை நிகழ்த்தப்படும். அந்தவகையில் பாராளுமன்றத்தில் ஆற்றப்படும் அக்கிராசன உரையில் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக நாட்டில் அமுல்படுத்த […]

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் மனித உரிமைகள் கருதி மின்வெட்டுடை அமுல் அமுல்படுத்தாது இருக்க நேற்று முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது. எனினும் பண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலாகியii குறிப்பிடதக்கது.

South Africa won by 27 runs

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட  ஒருநாள் (ODI) போட்டியில் தென்னாபிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நேற்றைய முதல் ODI போட்டியில் தென்னாபிரிக்க அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 299 என்ற இலக்கை நோக்கி பதிலளித்த இங்கிலாந்து சார்பில் ஜேசன் ரோய் 113 ஓட்டங்களை பெற்ற போதிலும் இலக்கை அடைய […]

New Zealand won by 21 runs

ரஞ்சியில் நேற்று இரவு நடைபெற்ற இந்திய – நியூசிலாந்து அணிகளுககு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்;து அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. மேற்படி போட்டியில் நியூ10சிலாந்து அணி இந்திய அணியை 21 ஓட்டங்களால் வென்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்து 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டெவோன் கொன்வே 52 ஓட்டங்களையும், […]

கச்சதீவு உற்சவம்

இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை 8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 4,500 இலங்கை பக்தர்களும், 3,500 ஆயிரம் இந்திய பக்தர்களும், ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பெற்றதோடு இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை நடாத்துவதற்கு இலங்கை மற்றும் இந்திய தரப்புகளின் இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் கட்சி அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்தொடர்பில் நடைபெறும் முன்னாயத்த கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்கள் தமது  இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்-VS

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை மலையக மக்கள் தமது  இருப்பை பாதுகாத்துக் கொள்ள பாவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரரும், LJEWU பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் முன்னணி ஊடகம் ஒன்றிடம் இதனை கூறியுள்ளா (மலையக தொழிலாளர்களின் இருப்பு கேள்விக்குறியாகி வருகின்றது. மலையக மக்கள் இன்று வரை அனைத்து உரிமைகளையும் போராடியே பெற்று வருகின்றனர. மாறாக எவரும் தட்டில் வைத்து கொடுக்கவில்லை. இன்று தோட்ட காணிகள் முறையாக பராமறிக்கப்படுவதில்லை. அதனால் பாம்பு, சிறுத்தை, குளவி […]