எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்காக விளையாடுவதே தமது ஒரே அபிப்பிரயாகும் என இலங்கையணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களில் தாம் அரசியல் ரீதியாக சம்பந்தப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளர். தனக்கு எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என தசுன் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் திருடப்படுகின்ற உடல் உறுப்புகள்

சீனாவில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டில் பலூன் கேங், உய்குர், திபெத்திய மற்றும் கிறிஸ்தவர்களில் பலர் சிறை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் திருடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் எதிரொலித்து உள்ளது. இதுபற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்ற பெயரிலான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன. இதுபற்றி, சீனாவில் மனித உறுப்புகள் கட்டாய அறுவடை என்ற தலைப்பில் […]

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு பெண், அதிரடிப்படையினரால் கைது

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா அல்லது “டிஸ்கோ” என அழைக்கப்படும் பெண், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண் ஒருவரிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் தற்போது பிரான்ஸில் வெளிநாட்டில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாரிய குற்ற செயல்களுடன் தொடர்புடைய ரூபனுடன் நெருங்கிய தொடர்பில் அவர் […]

மொட்டு சார்பில் இன்னும் 6 பேருக்கு அமைச்சுக்கள்

நாட்டின் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளியான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 4 அமைச்சுக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரும்புகிறவர்களுக்கும் வழங்கப்படவுள்ளன. ஆரம்பத்தில் 12 அமைச்சுக்கள் எஞ்சி இருந்தன. அவற்றுள் 7 அமைச்சுக்கள் மொட்டுக் கட்சிக்கும், 5 அமைச்சுக்கள் ரணில் விக்ரமசிங்க விரும்புகின்றவர்களுக்கும் என ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றுள் முதல் கட்டமாக மொட்டு சார்பில் பவித்ரா வன்னியாராச்சிக்கும், ஜனாதிபதியின் சார்பில் ஜீவன் தொண்டமானுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மொட்டு சார்பில் இன்னும் 6 […]

மீண்டும் வரலாறு காணாத டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் இவ்வருடத்தின் கடந்த சில நாட்களில் 4387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் 32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் வரலாறு காணாத உயர்வைப் பதிவு செய்துள்ளது என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 20334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, டெங்கு நோயினால் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் பெரும்பாலும் […]

 தனுஷ்க குணதிலக்க

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விளையாட்டுத் தடை விதிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளார். கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த T20 உலகக் கிண்ணத்தின் போது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு எதிராக சிட்னி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குணதிலக்க தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜ ஜாலி

இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். அதிக மழையுடன் நீரேந்து பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாகஅமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கு நாம் ஆதரவு. – எம்.பி.திகாம்பரம்

” உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தனிப்பட்ட ரீதியில் மாற்றுக்கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அட்டனில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, ” உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு பலவழிகளிலும் முயற்சித்து வருகின்றது.  தோல்வி பயத்தாலேயே யானை […]

TNA

சுதந்திரதினத்தை புறக்கணிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் பிரதநிதிகள், மற்றும் தமிழர்களுக்கு இதுவரை முழுமையான உரிமைகள் எதுவும் கிடைக்கவில்லை என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது 4 ஆம் திகதியை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

13 ஐ அமுல்படுத்த வேண்டும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” அரசியலமைப்பின் […]