லிந்துலை பேர்ஹாம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஆண் உயிரிழப்பு

தலவாக்கலை – லிந்துலை பேர்ஹாம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மற்றுமொருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். தேயிலை தோட்டத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்து கொண்டிருந்தவர்களே இன்று முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது, 72 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றுமொருவர் லிந்துலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலமும் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கை

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அலரிமாளிகையில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற “DIGIECON 2030” வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை தொழில்நுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் […]

40 அடி ஆழமான கிணறு இடிந்ததில் 35 பக்தர்கள் பலி

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வழிபாட்டுத்தலமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்து பண்டிகையான ராம நவமியை முன்னிட்டு பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வின் போது இந்த சம்பவம் வியாழக்கிழமை (30)  பதிவாகியுள்ளது. இந்தூர் நகரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் தொடர்ந்தும் காணாமற்போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கிணற்றுக்கு மேல் வழிபாடுகளில் ஈடுபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கிணற்றுக்கு மேலேயுள்ள […]

சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நேற்று இரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11:03 மணியளவில் சாண்டியாகோ நகரின் தென்மேற்கே சுமார் 328 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதன் விளைவாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியால் அலறியபடி தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர். […]

சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் அதிக பணவீக்கம் உள்ள நாடு

இலங்கை சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் சுட்டெண்ணில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவின் ஜோன் ஹொக்கிங் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுப் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹென்கி தயாரித்த பட்டியலிலேயே இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, இம்முறை பணவீக்க சுட்டெண்ணின் முதல் பக்கத்திலிருந்து இலங்கை வெளியேறியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், சுட்டெண்ணில் இலங்கை 18வது இடத்தில் இருந்தது. 10 மாதங்களுக்கு முன்பு, அதாவது 2022ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்தது. அப்போது சிம்பாப்வேயில் […]

இலங்கைக்கு மறக்க முடியாத தோல்வி

இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டியிலும் (ODI) நியூசிலாந்து அணி 6 விக்கெடடுகளால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி சார்பாக பெதும் நிஸ்ஸங்க 57 ஓட்டங்களை பெற்றார். நியூசிலாந்து அணி சார்பாக மெட் ஹென்றி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஹென்றி ஷிப்லி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி […]

பலுக்-பாலுக் தீவு அருகே திடீரென தீப்பிடித்த கப்பல்

பிலிப்பைன்சின் மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவு நோக்கி தனியாருக்கு சொந்தமான பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் கப்பல் ஊழியர்கள் 35 பேர் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு இந்த கப்பல் பசிலன் மாகாணத்தின் பலுக்-பாலுக் தீவு அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்தது. இந்த தீ கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் கப்பலில் இருந்த பயணிகள் […]

சடலமாக மீட்கப்பட்ட குழந்தையிடம் கனடிய கடவுச்சீட்டு

கியூபெக், ஒன்றாரியோ மற்றும் நியூயோர்க் பகுதிகளின் எல்லைப் பகுதியில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்க – கனடிய எல்லைப் பகுதியில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்ட குழந்தையிடம் கனடிய கடவுச்சீட்டு மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர் மூலம் மேற்கொண்ட […]

கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட ஆசிரியர்

கனடாவின் ஸ்காப்ரோவின் தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவர், மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் பல சந்தர்ப்பங்களில் மாணவர்களை குறித்த ஆசிரியர், பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். போன்ட் அகடமி என்னும் தனியார் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிய 50 வயது ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. றோயல் கார்னி என்ற இந்த ஆசிரியருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த ஆசிரியர் மேலும் […]

அமெரிக்காவில் பதிவான ஆபத்து மிக்க பற்றீரியா கனடாவிலும்

மிகவும் ஆபத்து மிக்க பக்றீரியா வகையொன்று கனடாவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் பதிவான ஆபத்து மிக்க பற்றீரியா வகையே இவ்வாறு கனடாவிலும் பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனித உடலில் பரவி, உடலையே சாப்பிடும் ஆபத்தான பக்றீரியா இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கிழக்கு கரையோரப் பகுதிகளில் இந்த ஆபத்து மிக்க பக்றீரியாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடல்கள் மற்றும் நீர் நிலைகள் வெப்பமடைந்தால் இந்த பக்றீரியாக பரவும் சாத்தியம் உண்டு என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலநிலை […]