திமுத் எடுத்த முடிவு

எதிர்வரும் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். வெலிங்டனில் முடிவடைந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2 க்கு 0 […]

நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும 58 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 580 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. அதன்படி, பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இந்நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை […]

மண்சரிவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பு கூற வேண்டும்

பூனாகலை கபரகலை தோட்டத்தில் மண்சரிவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பு கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை மாற்றத்தினால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகுவது பெருந்தோட்ட மலையக பகுதிகளே இதனை நன்கு அறிந்தும் நேற்றைய தினம் நடைபெற்ற மண்சரிவு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஏன் முன்னறிவித்தல் விடுக்கப்படவில்லை? இதனை பாரியதொரு குற்றமாகவே […]

ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நியாயமானது

ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நியாயமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைக்கான வலுவான காரணத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பினூடாக போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளமை தௌிவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனில் ரஷ்யா முன்னெடுத்துள்ள யுத்தத்தில் பல்வேறு போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் உக்ரைன் குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஐ.நா பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு கடந்த […]

மலையக மக்களின் எதிர்கால நலன்புரி வேலை திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம்…

சிங்கப்பூரில் நடைபெற்றும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் – ஆசியா பசிபிக் (ITUC-AP )பிராந்திய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் பங்கேற்றுள்ளார் இம்மாநாட்டில் மலையக மக்களின் எதிர்கால நலன்புரி வேலை திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோட்ட நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும்

பண்டாரவளை, பூனாகலை கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,  ” மீரியபெத்தையில் மண்சரிவு ஏற்பட்ட பின்னர், பதுளை பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கபரகல தோட்டமும் மண்சரிவு அபாய வலயத்தில் இருந்தது. எனவே, அம்மக்களை பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்குமாறும், வீடுகளை அமைப்பதற்கு பாதுகாப்பான இடத்தில் காணி ஒதுக்கி தருமாறும் நாம் […]

காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலி

பதுள, nபசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20) காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இன்று காலை 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளை- செங்கலடி வீதியின்,  பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள  வீடொன்றில் […]

கபரகல மண்சரிவு: ஜீவன் பணிப்பு

 பூனாகலை – கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், மண்சரிவு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு விரிவானதொரு அறிக்கையை முன்வைக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளிடம் இன்று வலியுறுத்தினார் அமைச்சர். இவ்வனர்த்தம் தொடர்பில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரஸ்தாபிக்கவுள்ளார். அதன் மூலம் மக்களுக்கு […]

மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதம் – எழுவர் காயம்

(அந்துவன்) பண்டாவளை – பூனாகலை கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், எழுவர் காயமடைந்துள்ளனர். தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பண்டாரவளை பகுதியில் (19.03.2023) நேற்று மாலை முதல் அடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் கபரகலை தோட்ட வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியிலேயே மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இரண்டு லயன் குடியிருப்பு தொகுதிகள் அமைந்துள்ளன. 30 முதல் 40 வரையான வீடுகள் சேதமடைந்துள்ளன என்று […]

இலங்கை இனியும் வங்குரோத்து நாடாக இல்லை

அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் எரிபொருள், உரம், உணவு ஆகியவற்றின் பற்றாக்குறை உள்ளிட்ட பல கடுமையான நெருக்கடிகளுடனே நாட்டைப் பொறுப்பேற்றதையும், பல போட்டிகளில் தோல்வியடைந்த றோயல் அணியைப் போன்ற நிலையே இருந்ததையும் […]