டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பொதுமக்களும் ஈடுபட வேண்டும்

டெங்கு ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து உள்ளூராட்சிமன்ற அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மாகாண ஆளுநர்கள், உள்ளூராட்சிமன்ற ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர கூறியுள்ளார். டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பொதுமக்களும் மும்முரமாக ஈடுபட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பஸ்தரிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் துப்புரவு பணிகளை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனுமொரு பகுதியில் சுற்றுச்சூழல் துப்புரவு செய்யப்படாதிருப்பின் அந்த […]

ஜப்பானிய கார்களுக்கு என்ன ஆனது?

உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. 2023 முதல் காலாண்டில் 1.07 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த காலகட்டத்தில், ஜப்பான் 954,185 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கிடையில், பெட்ரோலில் இயங்கும் கார்களுக்குப் பதிலாக மின்சார கார்களுக்கு சீனா முன்னுரிமை அளித்தது தங்களுக்கு சாதகமாக அமைந்தது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். தற்போது, ​​உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய மின்சார […]

ரஜினி + கபில்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி சென்னையிலிருந்து மும்பைக்கு சென்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.  

உமா ஓயா திட்டம் இறுதி கட்டத்தில்…

உமா ஓயா நீர் மின் நிலையத்தின் முதலாவது மின்சார உற்பத்தி அலகு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவினூடாக அமைச்சர் இதனை கூறியுள்ளார். குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் செயற்திட்ட முகாமையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (18)  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு விஜயம் செய்திருந்த போது, ​​இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சரின் […]

தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நியூ கலிடோனியா, பிஜி, வனுவாடு போன்ற பகுதிகளில் சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு…

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் 23ம் திகதி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையே 3 ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் நடைபெறவுள்ளன. ICC மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் கீழ் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இத்தாலியின் வடக்குப் பகுதியில் வெள்ள பாதிப்பு – 13 பேர் பலி

இத்தாலியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் உள்ள சுமார் 20 ஆறுகளில் வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 280 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. இதனால் பெருமளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்குm அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது எனவும் ஜல்லிக்கட்டு தொடர்பில் தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லுபடியாகும் எனவும் இந்திய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி K.M. ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச அரசியல் சாசன அமர்வில் வழக்கு விசாரணைக்கு […]

செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.