ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்களுக்கு திடீர் சுகவீனம்

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றவர்களில் 10 பேர் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக் பெற்றுக் கொண்டு வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ஏதேனும் […]

உலகின் மிகப் பெரிய இரு கண் தொலைநோக்கி

உலகின் மிகப் பெரிய இரு கண் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் மிகப் பெரிய இரு கண் தொலைநோக்கி கனடாவில்? | World S Largest Pair Of Binoculars பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டேவிட் கிப்னேய் என்ற நபர் இவ்வாறு தொலைநோக்கி ஒன்றை உருவாக்கி வருகின்றார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக தாம் வானியல் ஆய்வாளராக கடமையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். 19 ஆண்டுகளாக இந்த இரு கண் தொலைநோக்கியை உருவாக்கும் முயற்சிகளை […]

கால்கரி மற்றும் எட்மண்டன் ஆகிய நகரங்களில் காற்றின் தரம்….

காட்டுத்தீ காரணமாக கடும் புகை உருவாகியுள்ளதால், ஆல்பர்ட்டா மாகாண மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு கனடா சுற்றுச்சூழல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். கால்கரி மற்றும் எட்மண்டன் ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், அதனால் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறுகள் கொண்டவர்களுக்கு பெரும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். காட்டுத்தீ காலகட்டத்தில், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு கூறியுள்ள அதிகாரிகள், காற்றின் தரம் குறித்தும், புகை காரணமாக சாலையில் வரும் வாகனங்கள் கண்ணுக்கு […]

மெட்டாவுக்கு அபராதம்

நீதிமன்றத் தீர்ப்பை மீறி ஐரோப்பிய ஒன்றியப் பயனர் தரவை அமெரிக்காவிற்கு மாற்றியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அயர்லாந்து கட்டுப்பாட்டாளர் இன்று அறிவித்துள்ளார். தகவல் பரிமாற்ற சட்டத்தை மீறியதாக, மெட்டாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளது. அதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக செயல்படும் அயர்லாந்து தரவு பாதுகாப்பு ஆணையம், 1.2 பில்லியன் யூரோக்கள் நிர்வாக அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை எனப்படும் ஐரோப்பாவின் கையொப்ப தரவு தனியுரிமைச் சட்டத்தின் […]

அமெரிக்கப் பெண்ணுக்கு அதிர்ஷ்டம்

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வசிக்க வீடு இல்லாமல் இருந்த அமெரிக்கப் பெண்ணுக்கு அதிர்ஷ்டம் லொட்டரி வடிவில் கதவைத் தட்டியுள்ளது.ஒரே இரவில் பல லட்சம் டொலர்களை வென்றுள்ளார். லொட்டரியில் 50 லட்சம் டொலர்கள் வென்றதை அறிந்ததும் முதலில் பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த லூசியா ஃபோர்செத் நீண்ட காலமாக நிதி ரீதியாக சிரமப்பட்டு வந்துள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்னர் குடியிருக்க வீடு கூட இல்லை. கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்றார்.தயக்கத்துடன் ஒருநாள் லொட்டரி சீட்டை கொள்வனவு செய்துள்ளார்.இந்த […]

தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் – ஜீவன்

” சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உதவி திட்டங்களில் இருந்து மலையக பெருந்தோட்ட மக்களின் பெயர்கள் வெட்டப்படுவதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது உண்மை கிடையாது. இம்முறை உரிய வகையிலேயே பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உதவி திட்டங்களை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது கிடைக்கும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இன்று (22) […]

நடிகர் சரத்பாபு காலமானார்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், ஹைதராபாத் […]

இலங்கை மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் தனித்துவமான மைல்கல்

கூட்டு முயற்சிக்கான சிறந்த சாட்சியாக ஹெம்மாதகம நீர் வழங்கல் திட்டம் அமைந்துள்ளதாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் ஆர். டெமெட் செகர்சியோக்லு (R.Demet Sekercioglu) தெரிவித்தார். இலங்கை மக்களின் இயல்பு வாழ்வை கட்டியெழுப்புவதற்காக வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் தனித்துவமான மைல்கல்லாக அமைந்துள்ள இந்தத் திட்டம் அமைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தூதுவர், ஆயிரக்கணக்கான மக்களின் தாகத்தைத் தணித்தல், சுகாதாரத்தைப் பாதுகாத்தல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட கூட்டு முயற்சி இது […]

சாம்பியன் பட்டம் வெல்லாத RCB

2009, 2011 மற்றும் 2016 என மூன்று முறை கோப்பையை நெருங்கிய RCB  அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. நடப்பு சீசனிலும் பிளே- Off வாய்ப்பை கடைசி லீக் போட்டியில் இழந்த ஆர்சிபி வீரர்கள் கலங்கிய கண்களோடு விடைபெற்றனர். RCB இறுதிப் போட்டி மட்டுமல்லாது 5 முறை அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஓர் அணி.

சினோபெக் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்

இலங்கையின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக் உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம். பி. டி. யூ. கே. மாபா பதிரனவும் சினோபெக் நிறுவன எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோக திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் சென் சென்க்மிம் ( Chen Chengmim )ஆகியோர் ஜனாதிபதி […]