நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2023 ஆம் ஆண்டு முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசப் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை பருவத்தின் இரண்டாம் கட்டப் படிப்பு வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி நிறைவடைகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் பாடசாலைபருவத்தின் மூன்றாம் கட்டம் தொடங்க உள்ளது.

கனடாவின் பிரபல நடிகையும், இசைக் கலைஞருமான சமந்தா காலமானார்

கனடாவின் பிரபல நடிகையும், இசைக் கலைஞருமான சமந்தா வெயின்ஸ்டின் தனது 28ம் வயதில் காலமானார். கருப்பை புற்று நோயினால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக போராடி வந்த சமந்தா காலமானார். ரொறன்ரோவில் பிரின்ஸ் மார்கரட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமந்தா தனது ஆறு வயது முதல் நடிப்புத்துறையில் ஜொலித்து வந்தார் என்பத குறிப்பிடத்தக்கது. நடிப்பு, இசை, பின்னணி குரல் என பல்பரிமாண கலைஞசராக சமந்தா தனது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரினதும் பாராட்டுக்களை […]

கனடாவில் மாணவர்களுக்கு இலவச உணவு

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்களுக்கு இலவச காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். கல்வி அமைச்சர் ஸ்டீவன் லீஸ் மற்றும் சிறுவர் நல அமைச்சர் மைக்கல் பார்சா ஆகியோருக்கு கடிதம் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படடுள்ளது. மாணவர்களுக்கான போசாக்கு திட்டங்கள் போதுமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உணவு வங்கிகளில் நலன் பெற்றுக் கொள்வோரில் 30 வீதமானவர்கள் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தின் […]

கனடாவில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள்

கனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய மாணவர்களில், மார்ச் மாதத்தில் மட்டும் எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், அவர்களில் இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இந்த தகவலைக் கொடுத்துள்ளது, ரொரன்றோவிலுள்ள ஒரு இறுதிச்சடங்கு மையம். Lotus என்னும் அந்த இறுதிச்சடங்கு மையம், கனடா முழுவதிலுமிருந்து, உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் அல்லது அஸ்தியை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் பணியைச் செய்துவருகிறது. இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உயிரிழக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து […]

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சி, பரிசளிப்பு

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியொன்று இன்று (25) திறந்து வைக்கப்பட்டது. அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இன்று (25) முதல் ஒரு வாரக்காலத்துக்கு நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்தவகையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சௌமியபவனில் அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியொன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை இராஜலட்சுமி ஆறுமுகன் தொண்டமான் அம்மையார் மற்றும் கண்டியைச் சேர்ந்த […]

துருக்கி மற்றும் ஈராக் நாடுகளை அச்சுறுத்தும் பயங்கரவாத செயல்கள்

இஸ்லாமிய நாடான துருக்கியில் குர்து இன மக்கள் தங்களுக்கு தனிநாடாக குர்திஸ்தானை அறிவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதற்கு ஆதரவாக குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி தொடங்கி குர்து இன மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் வசிக்கும் யாசிதி இன மக்கள் சிறுபான்மை இனத்தவர்களாக கருதப்படுகிறார்கள். சின்ஜார் பாதுகாப்பு பிரிவு என்னும் பெயரில் அமைப்பு தொடங்கி யாசிதி இனமக்களின் நலனை காக்க அவர்கள் போராடுகிறார்கள். இந்த இரு அமைப்புகளும் இணைந்து துருக்கி மற்றும் […]

பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.பனமா- மற்றும் கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் சேதம் […]

IMF முன்மொழிவு பற்றி ஜப்பானில் அதிக கவனம்

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு நிதி அமைச்சர்ஷுனிச்சி சுஸுகியை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தச் சந்திப்பில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வீசிய புயல்

அமெரிக்காவில் வீசிய பலத்த புயல் காற்று காரணமாக இருவர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்றைய தினம் (24-05-2023) கடும் சூறாவளி புயல் தாக்கியது. இதனால் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசி ஆலங்கட்டி மழை கொட்டியது. இந்த இயற்கை சீற்றத்தால் நகரின் பல வீடுகளுக்குள் நீர் புகுந்தது. தண்ணீரால் நகரம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழைப் பொழிவின்போது புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து தரைமட்டமானது.   […]

VSக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான அரசாங்கத்தின் யோசணைக்கு ஆதரவு தெரிவித்த வடிவேல் சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று(25) கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான வாக்கெடுப்பு நேற்று(24) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் […]