வட மேல் மாகாணத்திற்கு கால்நடைகளை கொண்டு செல்வதும் ஏற்றுமதி செய்வதும் தடை

வட மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. குருணாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் இடையே தோல்கழலை நோய் பரவி வருகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் வடமேற்கு மாகாண பதில் பணிப்பாளர் B.C.S.பெரேரா தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எர்டோகன்

துருக்கி ஜனாதிபதியாக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்/ நேற்று நடந்த மறு தேர்தலில் அவர் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார. 69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார்.

இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் யஷஷ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. IPLலில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக ஜெய்ஸ்வால் 625 ரன்கள் எடுத்தார், இதில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11 வரை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ADB – ஜீவன் கலந்துரையாடல்யாடல்

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. நீர்வளத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைக்கான ஒப்பந்தங்களை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது. மூன்று ஆண்டு கால சீர்திருத்த திட்டத்தில் ஒருமித்த கருத்தை அடைவதே கூட்டத்தின் நோக்கமாகும். சீர்திருத்த வேலைத்திட்டமானது இலங்கையின் நீர்த்துறையில் உள்ள பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாற்றியமைக்கும் முன்முயற்சி ADB யிடமிருந்து கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது, இது சீர்திருத்த நிகழ்ச்சி […]

இன்று O/L

இந்த வருடத்திற்கான சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மழையால் நிறுத்தப்பட்ட IPL இறுதிப் போட்டி இன்று

2023 IPL தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் மீண்டும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்ப்ட்டுள்ளது. நேற்று இரவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற இருந்தது. எனினும் தொடர் மழைக் காரணமாக நேற்று நடைபெற இருந்த இறுதிப் போட்டி இன்று மீண்டும் நடைபெவுள்ளது.