பாகிஸ்தான் நாட்டில் தேவாலயங்கள் மீது தீ வைப்பு
பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதோடு அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சட்டவிரோதமாக எந்த இன மக்கள் செயற்பட்டாலும் எதிர்த்து குரல் கொடுப்பேன்! சாணக்கியன் சபதம்!
சட்டவிரோதமான செயல்படும் அனைத்து இன மக்களின் செயற்பாடுகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பேன், இதில் நான் பாகுபாடு பர்க்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் கூறியுள்ளார். சட்டவிரோதமாக யார் செயற்பட்டாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதாவது சட்டவிரேதமாக எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும் அது தவறு என்பதே […]
அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த சிங்களக்குடும்பங்களுக்கு தியாகி ஐயாவின் உதவி :
எஸ்.எம்.எம்.முர்ஷித். அனுராதபுரம் -மிகிந்தலை தம்மன்னாவ பிரதேசத்தில் கடந்த 11.08.2023 ஆந் திகதி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மூன்று குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ள சோகச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பிரதேச வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்களாவர். 8, 12 வயதுடைய ஆண், 14 வயதுடைய பெண் பிள்ளையின் தந்தை தர்மசிரி ரணதுங்க (வயது 43), 22 வயதுடைய பெண் பிள்ளை, 14, 07 வயதுடைய ஆண் பிள்ளைகளின் தந்தை எஸ்.மஹிந்த குமார (வயது 45), […]
கிழக்கு மாகணத்தில் மதங்களின் ஒற்றுமையை காக்க வேண்டியது என் பொறுப்பு! விகாராதிபதிகளை சந்தித்த ஆளுநர் தெரிவிப்பு!
சந்திரகுமார். நிலாவெளியில் அமைக்கப்படவிருந்த விகாரை தொடர்பாக, உரிய விகாரைகளுக்கு சென்று, அங்குள்ள விகாராபதிகளை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்துள்ளார். விகாராதிபதி மைத்திரி மூர்த்தி மஹாநாயக்க தேரர் மற்றும் விகாராதிபதி ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ச மஹாநாயக்க மஸ்த்ரவில அமரபுர மூலவன்ச பார்சவய தேரர்களிடம் ஆசியை பெற்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது விளக்கத்தை கூறி இருக்கிறார். திருகோணமலை நிலாவெளி இழுப்பை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த […]
மட்டக்களப்பில் சர்வதேச இளைஞர் தின நிகழ்வு.
(இப்னு ஷெரீப்) சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண இளைஞர் தின நிகழ்வு அண்மையில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில்(தேசியப் பாடசாலை) நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எம்.பி.சரத் சந்ரபால தலைமியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம வளவாளராக மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் பணிப்பாளர் எஸ்.ஜயபாலன் கலந்து கொண்டு சர்வதேச இளைஞர் தினத்தின் முக்கியத்துவம், மற்றும் தொழிற்திறன்கள் பற்றி விரிவுரையாற்றினார். இந்நிகழ்வில் […]
கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்” பரிசளிப்பு விழா!
C..G .பிரசாந்தன், எம் நாசார் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை “கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்” 2022 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்றைய தினம் அதிபர் திருமதி. V. சாந்தினி சர்மா அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு வலயக் கல்வி பணிப்பாளர் . P.R. தேவபந்து அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக, பிரதிக் கல்வி பணிப்பாளர் . K. ரஞ்சித் பிரேமதிலக்க மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா […]
கனடா – காட்டு தீ காரணமாக “Yellowknife”லிருந்து 20ஆயிரம் பேர் வெளியேற்றம்!!
கனடாவின் டெரிடோரியான நோர்த் வெஸ்ட் டெரிடோரியல் பகுதிகளில் அதிகமான வெப்பநிலை காரணமாக காட்டு தீ பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு நலன் கருதி 20 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்ததனை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். இதன்படி இன்கிராம் டிரெயில்,இன் டிட்டா,காம் லேக்,கிரேஸ் லேக், இங்கல் வர்த்தக மைய பகுதியிலிருந்த மக்களே பாதுகாப்பாக அகற்றப்படுகின்றனர். Yellowknife residents are evacuating. pic.twitter.com/Qs2rYOsXv1 — +Jon Hansen (@CSsR_Preacher) […]
அம்பாறை கடல் வலைகளில் அதிகளவான கீரி மீன்கள்! மீனவர்கள் கொண்டாட்டம்
(இப்னு ஷெரீப்) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களில் நீண்டகாலத்திற்குப் பின்னர் கரைவலைக்கு அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இப்பிரதேசங்களில் ஏற்பட்ட பாரிய கடலரிப்பு மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக மீன்பிடித் தொழில் முற்றாக செயலிழந்திருந்தது. இதனால் இத்தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவருகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அதிகளவான கீரி மீன்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் கரைவலை மீன் […]
ஜெயிலர் பாட்டுக்கு ஆடிய லெஜண்ட் சரவணன்! புதிய படம் ஜனவரியில்!
சரவணன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது.ஆனாலும் அவரது சினிமா லுக் இன்றைய இளசுகளையும் கவர்ந்து இழுத்து இருக்கிறது. .ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக அவர் சிறுவர் முன்பள்ளி பாடசாலைக்கு சென்று குழந்தைகளுடன் குழந்தையாக ஆடி பாடி பரிசில்களை வழங்கி கொண்டாடினார். மேலும அவரது புதிய படத்தை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் அதிரடி அக்ஷன் படமாக இருக்குமெனவும் ஜனவரி மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் […]