நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும 58 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 580 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. அதன்படி, பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இந்நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை […]

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஊடக அறிக்கை…

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான T20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறிது காலத்திற்குப் பிறகு, இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் மீண்டும் T20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

Sri Lanka chose to field.

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 62 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதேவேளை, இன்றைய போட்டிக்கு நிரோஷன் திக்வெல்லவுக்கு பதிலாக நிஷான் மதுஷ்க அழைக்கப்பட்டுள்ளார். நிஷான் மதுஷ்கவுக்கு இது முதலாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

New Zealand Vs Slc 2nd Test

இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி உள்ளூர் நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. நாளைய போட்டியில் நிரோஷன் டிக்வெல்லவுக்கு பதிலாக இளம் வீரர் நிஷான் மதுஷ்க இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Bangladesh won by 16 runs

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்றிரவு மிர்பூரில் இடம்பெற்ற 3 ஆவது T20யில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 3-0 என பங்களாதேஷ் அணி வெற்றி கொண்டுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்குடி 158 ஓட்டங்களை பெற்ளறது. இதனையடுத்து 159 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 […]

Ireland national team to tour Sri Lanka

ஏப்ரல் மாதம் அயர்லாந்து கிரிக்கெட் அணி இலங்கை வரவுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது. அயர்லாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரண்டு போட்டிகளும் காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

போர்டர் – கவாஸ்கர் கிண்ணத்தை இந்தியா வென்றது

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அஹதாபாத்தில் நேற்று முடிவடைந்த நான்காவது டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்துள்ளது. என்றாலும் நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2:1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியது. இதன்படி 4 ஆவது முறையாக போர்டர் – கவாஸ்கர் கிண்ணத்தை இந்தியா வென்றமை குறிப்பிடதக்கது. இந்த தொடரில் 25 விக்கெட் மற்றும் 86 ரன் எடுத்த அஸ்வின், 22 விக்கெட் மற்றும் 135 ரன் எடுத்த ஜடேஜா சகலதுறை வீரார்களாக தெரிவாகினர். […]

இலங்கையணியின் எதிர்பார்ப்பு மங்கியது

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது . நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. கிறைஸ்ட்சேர்ச்சில் ஆரம்பமான முதலாவது […]

பின் வரிசை துடுப்பாட்டம் நியூசிலாந்தை காப்பாற்றியது

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறும் முதல் டெஸ்டின் இரண்டாவது நாள் இன்றாகும். போட்டியில் இலங்கை முதல் இனிங்சில் 355 ஓட்டங்களையும் நியூசிலாந்து 373 ஓட்டங்களையும் பெற்றன. இதன்படி இலங்கையணி இப்போதைக்கு 32 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியின் முதல் இனிங்ஸ் துடுப்பாட்டத்தில் டேரல் மிச்சேல் (Daryl Mitchell ) 102 ஓட்டங்களை பெற்றதுடன் இலங்கையின் பந்து வீச்சில் அஷித பெர்ணான்டோ 4 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

1st Test, Christchurch

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறைஸ்ட் சேர்சில் இடம்பெறுகின்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சம் சிறிய ஓய்வுக்கு பின்னர் விளையாடுகின்றார்.