ஓன்றுக்கும் இரண்டுக்கும் இடையில் இன்று மோதல்

மகளீர் உலகக் கிண்ணT20 தொடரில் இலங்கையணி இன்று மாலை 6.30க்கு அவுஸ்திரேலிய மகளீர் அணியை எதிர்தாடவுள்ளது. குழு Aயில் இடம்பெற்றுள்ள இலங்கை மகளீர் அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதே பட்டியலில் அவுஸ்திரேலிய மகளீர் அணி முதலிடத்தில் உள்ளது.  

இலங்கையணி வீரர்கள் நுவரெலியாவில்…

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் நுவரெலியா ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுப்பட்டனர். திர்வரும் நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக இந்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது. தம்புல்ல கிரிக்கெட் கழகத்தினால் நிர்வகிக்கப்படும் நுவரெலியா ரதெல்ல கிரிக்கெட் மைதானம் தேசிய அணியின் பயிற்சி நடவடிக்கைக்கு வழங்குதல் என்ற இணகக்ப்பாட்டுக்கு அமைய மேற்படி மைதானம் செப்பனிடப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.  

ICC

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் காப்பாளர் அனுஷ்கா சஞ்சீவனிக்கு சர்வதேச கிரிக்கெட் மகளிர் பேரவை (ICC) அபராதம் விதித்துள்ளது. T20 உலகக் கிண்ண தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது ICC ஒழுங்கு விதிகளை மீறியமையே இதற்குக் காரணம். இந்த ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அனுஷ்கா சஞ்சீவனி தனது ஒழுக்கக் குறியீட்டில் முதல் நிலைக் குற்றத்தைச் செய்ததாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அந்த போட்டியின் பங்களாதேஷ் […]

எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும்

நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது. எனவே, எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தேசிய நீர் கொள்கைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் மகாவலி அதிகார சபையில் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, நீர்வழங்கல் […]

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வெளியிட்ட ஜாலியான தகவல்

இலங்கை மகளீர் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்படும் போட்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி மற்றும் போட்டிகளுக்காக வீராங்கனை ஒருவருக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 250 டொலரை 750 டொலர்களாக அதிகரிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. அணிக்கு பெயரிரப்படும் மேலதிக வீராங்கனை ஒருவருக்கு போட்டி கட்டணத்தில் 25 வீதத்தை வழங்கவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அதேபோல் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு வீராங்கனைக்கும் 250 டொலரை […]

கலக்கும் இலங்கை மகளீர் அணி – SL WMN won by 7 wicket

மகளீர் T20 உலகக் கிண்ண தொடரில் குழு ஒன்றுகான ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ் மகளீர் அணிரயை இலங்கை மகளீர் அணி 7 விக்கெட்டுகளால் வென்றுள்ளது. கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்களாதேஷ் மகளீர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 8 விக்கெட் இழப்புப்கு 126 ஓட்டங்களைப் பெற்றது. 127 என்ற இலக்கை நோக்கி பதிலளித் இலங்கை மகளீர் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.  

India won by an innings and 132 runs

நூக்பூரில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அஸி பெற்ற அதிகூடிய 49 ஓட்டங்கள் உதவியால் 177 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். […]

Blue Mountion – கிரிக்கெட் போட்டி

பண்டாரவளை ஊவா – ஹைலண்ட்ஸ் Blue Mountion விளையாட்டு கழகம் நடத்தும் அணிக்கு எழுவர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் பெருந்தோட்ட அணிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதாக போட்டி ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த போட்டிகள் நடைபெறும் என போட்டி ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது. இதில் முதலாம் இடத்தை பெறும் அணிக்கு […]

தேடுதல்கள் தொடர்கின்றன…

துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் தொடர்ந்தும தேடுதல்கள் தொடர்கின்றன. உயிரிழந்தவர்களில் அந்த நாட்டு தேசிய மகளீர் அணி வீராங்கனைகள் நால்வர் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இரு ஆசிரியைகளும், மாணவி ஒருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனினும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட தென் துருக்கி பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் தொடர்கின்றன

இலங்கை திரில் வெற்றி

மகளீர் உலகக் கிண்ண தொடரின் நேற்றைய ஆரம்ப போட்டியில் இலங்கை மகளீர் அணி தென்னாபிரிக்க மகளீர் அணியை 3 ஓட்டங்களால் வென்றுள்ளது. கேப்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளீர் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஷாமரி அத்தபத்து 68 ஓட்டங்களைப் பெற்றார். இதனையடுத்து 130 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த தென்னாபிரிக்க மகளீர் அணி இருபது ஓவர்களில் […]