ஜடேஜா தனது விரல்களில் வலி நிவாரணி கிரீமை தடவினார்

ஜடேஜா தனது கைவிரலில் மர்ம பொருளை தடவினார் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. முகமது சிராஜ் தனது உள்ளங்கைக்கு மேலே வைத்து ஒரு க்ரீம் போன்ற திரவத்தை ஜடேஜாவிடம் கொடுக்கிறார். அதை ஜடேஜா தனது விரலால் லேசாக தொட்டு, பந்தை பிடித்து வீசும் இடது கையின் அனைத்து விரல்களிலும் தடவினார். ஜடேஜா தனது கைவிரலில் தடவிய மர்ம பொருள் என்ன என்று சர்ச்சை கிளம்பின. அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம்பெய்ன் டுவிட்டரில் கூறும் போது, இது […]

Australia tour of India

அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறும் போடர் – கவாஸ்கர் கிண்ணத்துக்கான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நபள் ஆட்டம் இன்று தொடர்கின்றது. நேற்று அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடியது. இதன்போது இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் கை ஓங்கியிருந்தது. R.அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் R.ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணியை முதல் இனிங்சில் 177 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழக்கச் செய்தனர். இதன்போது ஜடேஜாவின் பந்து வீச்சு தொடர்பில் அவுஸ்திரேலிய […]

2024 ஒலிம்பிக் விழா…

2024 ஒலிம்பிக் விழாவை 40 நாடுகள் புறக்கணிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ்  வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது. ரஷ்ய, பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டால், பாரிஸ் ஒலிம்பிக் விழாவை பகிஷ்கரிப்பதாக உக்ரைன் எச்சரித்திருந்தது. இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிவிப்பை போலந்து, லித்துவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகிய நாடுகள் கூட்டாக நிராகரித்துள்ளன. இதனையடுத்து, சுமார் 40 நாடுகள் வரை ஒலிம்பிக் போட்டிகளை […]

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்னும் 1 மணித்தியாலத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக இரு அணி தலைவர்களும் கிண்ணத்துடன் புகைப்படத்திற்கு தோன்றினர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவுஸ்திரேலிய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். நெதன் லீயோன் , எஸ்டன் ஏகர், மிட்செல் ஸ்வெப்சன், டாட் மர்பி ஆகியோர் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் மோரீஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் உள்ளனர். 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் […]

முதல் டெஸ்ட் – 1st Test, Nagpur, February 09 – 13, Australia tour of India

இந்தியா – Australiaஅணிகள் இடையிலான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் கடந்த சில நாட்களாக நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய பயிற்சிக்கு பின்னர் இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது: முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இது ஒரு கடினமான முடிவாக இருக்கும். மிகச்சிறப்பாக விளையாடி […]

ஜயவர்தன

அவுஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் திகதி தொடங்குகிறது இந்நிலையில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரை அவுஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என இலங்கை முன்னாள் ஜாம்பவான் ஜயவர்தன கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும். இருப்பினும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2- […]

SL Women won by 2 runs

T20 மகளீர் உலகக் கிண்ண போட்டிகளுக்கான பயிற்சி போட்டி ஒன்றில் இலங்கை மகளீர் அணி அயர்லாந்து மகளீர் அணியை தோற்கடித்துள்ளது. இந்த போட்டியில் 2 ஓட்டங்களால் அயர்லாந்து மகளீர் அணியை இலங்கை மகளீர் அணி வென்றமை விசேட அம்சமாகும். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளீர் அணி இருபது ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றது. இதற்கு பதிலளித்த அயர்லாந்து மகளீர் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 2 ஓட்டங்களால் தோல்வியடைந்தது

தவான் மீது முகர்ஜிக்கு “உண்மையான” குற்றச்சாட்டுகள் இருந்தால்…??

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவர் தனது புகழையும், கேரியரையும் கெடுத்து விடுவதாக அவரது மனைவி ஆஷா முகர்ஜி மிரட்டியதாக டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் ஐபிஎல் உரிமையாளரான டெல்லி கேப்பிடல்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி தீரஜ் மல்ஹோத்ரா முன் தனது புகழை கெடுக்கும் நோக்கத்துடன் அவதூறான செய்திகளை அவர் பரப்பியதாகவும் தவான் கூறி உள்ளார். இதை தொடர்ந்து ஷிகர் தவானின் முன்னாள் மனைவி ஆஷா முகர்ஜி, தனது கணவருக்கு எதிராக சமூக […]

இந்திய அணி பாகிஸ்தான் வராவிட்டால்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. எனவே, ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பஹ்ரைனில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் இடம் குறித்து எந்த […]

Aus – Ind

அவுஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வூட் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை இழந்துள்ளார். உபாதை காரணமாகஆவ அவர் முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு பதிலாக ஸ்கொட் போலண்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸட் எதிர்வரும் 9 ஆம் திகதி கான்பூரில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடதக்கது.