அதானியின் சொத்து மதிப்பு சரிந்து, ஏழாம் இடத்துக்கு

அதானி குழுமப் பங்குகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை கடும் சரிவுடன் வர்த்தகமானதைத் தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு சரிந்து, ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், வெள்ளிக்கிழமை காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதும், அதானியின் சொத்து […]

தோனி என்டர்டெயின்மெண்ட்

‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தமிழ் படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது. காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.  

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி இந்திய அணி, ஜப்பானுடன்

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, இங்கிலாந்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. […]

கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்

ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதேபோல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு ‘பெண்கள் பிரிமீயர் லீக்’ என்று நேற்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 5 அணிகள் பங்கேற்கும் என்றும் 10 […]

ஜனித் பெரோ உள்ளிட்ட வீரர்களுக்கு அழைப்பு

கிரிக்கெட் சுற்று தொடருக்காக இலங்கை வந்துள்ள இங்கிலாந்தின் பிராந்திய அணிகளில் ஒன்றான லயன்ஸ் கழக அணியுடனான தொடரில் விளையாட குசல் ஜனித் பெரோ உள்ளிட்ட வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கை ஏ அணியில் விளையாடவே குசலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிறி லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அதன்படி, குசல் ஜனித் பெரேரா, பெத்தும் நிஸாங்க, ச்சரித் ஹசலங்க, ச்சாமிக்க கருணாரத்ன, ஏஞ்சலோ மெத்திவ்ஸ், துனித் வெல்லாலகே, லக்ஷான் சந்தகென், ச்சமிர சமரவிக்ரம, விஷ்வ பெர்னாண்டோ, பிரோமத மதுஷான், […]

வயிட் வொஷ்

இந்துரில் நேற்று இரவு இடம்பெற்ற இந்திய – நியூசிலாந்;து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வயிட் வொஷ் செய்து கைப்பற்றியுள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் […]

கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். இவரும், இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி கடந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் கந்தாலாவில் உள்ள […]

Pakistan and Afghanistan

அவுஸ்திரேலிய அணியை போல் பாகிஸ்தான் அணி எதிர்வரும் கிரிக்கெட் தொடரை அர்த்தமற்ற காரணங்களுக்காக இரத்து செய்வது உசிதமல்ல என Afghanistan கிரிக்கெட் அறிவித்துள்ளது. Afghanistan கிரிக்கெட் சபை தலைவர் நஜிம் செத் (Najam Seth) இதனை நேற்றைய ஊடகச் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார். ஒரு நாட்டின் அரசியலை கிரிக்கெட்டோடு சம்பந்தப்படுத்துவது சரியல்ல எனவும் அவர் கூறயுள்ளார். எவ்வாறாயினுனும் இந்த கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து பாகிஸ்தான் அணி நிர்வாகத்துடன் கலந்துரையாடி வரவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

T20 ஆடவர் மற்றும் மகளீர் உலக அணி

2022 ஆம் ஆண்டுக்கான T20 ஆடவர் மற்றும் மகளீர் உலக அணிக்கு இலங்கை வீர மற்றும் வீராங்கனை இருவர் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதன்படி ஆடவர் அணிக்கு இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும் மகளீர் அணிக்கு இனோகா ரணவீரவும் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆடவர் T20 அணிக்கு தலைவராக ஜோஸ் பட்லர் செயற்படவுள்ள நிலையில் மகளீர் அணிக்கு நியூசிலாந்து வீராங்கனை சோபி டிவைன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

FIFA

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் உபாலி ஹேவகேவுக்கு கடிதம் மூலம் இந்தத் தடை குறித்து அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற உத்தியோகபூர்வ தேர்தலில் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய […]