ரஷியாவை ஒலிம்பிக்கில் அனுமதிப்பதற்கு மேலும் பல நாடுகள் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளன. போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா, பெலாரஸ் நாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும்போது மற்ற நாட்டு வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். இரு நாட்டு வீரர்களையும் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். அத்துடன் உக்ரைன் மீதான போரை திசைதிருப்பும் விதமாக இந்த விளையாட்டு பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளன. 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் […]

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை

சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த, கடுமையாக உழைத்த டி.எஸ். சேனநாயக்க உள்ளிட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தி, நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீழப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன். 75 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சுதந்திரம் பெற்றபோது, புகழ்பெற்ற […]

“நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு இலங்கையரும் அறிய வேண்டும்

“இலங்கை அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அழுத்தத்தை தொடர்ந்தும் உணர ஆரம்பித்துள்ளமையை நான் அறிவேன். இந்த அழுத்தம் தாங்க முடியாத சுமையாக இருக்கலாம். இது ஸ்திரமின்மை, தனிமை மற்றும் பயங்கரமானதாக இருக்கலாம். நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு இலங்கையரும் அறிய வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் சிறந்த விலைமதிப்பற்ற பொதுநலவாய குடும்பத்தின் ஒரு பகுதியாவீர்கள் என பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவித்தார். புவிசார் அரசியல் வரைபடவியலாளர்களுக்கான ஆரம்ப விரிவுரையை ஆற்றியபோதே அவர் […]

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்

“நழிவடைந்துள்ள சகல துறைகளும் கட்டியெழுப்பப்பட்டு, பொருளாதார ஸ்திரமிக்க நாடாக எமது நாட்டை உயர்த்த வேண்டியது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமை என்பதை இந்நாளில் நினைவூட்டிப் பார்ப்பதே சிறந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது 75 வது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான கரங்களைப் பலப்படுத்தி, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டை சுபீட்சமானதும் வளமிக்கதுமான நாடாக மாற்றியமைக்க வேண்டும் […]

75ஆவது தேசிய சுதந்திர தின விழா (Photos)

75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், “நமோ நமோ தாயே நூற்றாண்டுக்கான முதற்படி” எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (04) முற்பகல் காலிமுகத்திடலில் நடைபெற்றது. மிகக் குறைந்தச் செலவில் பெருமைக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின் பிரதான நோக்கம் இலங்கையர்களின் பெருமையை மீண்டும் உலகுக்கு வெளிக்காட்டுவதாகும். ஜனாதிபதியின் வருகையைக் குறிக்கும் வகையில் இலங்கை இராணுவத்தினர் இசைவாத்தியங்களை இசைத்த பின்னர், பாதுகாப்பு படைகளின் […]

சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி

202, 2023 ஆண்டுகளில் சீனாவுக்கு இலங்கை செலுத்த வேண்டியிருந்த கட்ன் மற்றும் அதற்கான வட்டியை பெற்றுகொள்ளாதிருக்க சீனா முன் வந்துள்ளது. இது தொடர்பில் இலங்கை நிதியமைச்சை தெளிவுப் படுத்தியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிக்ஹிங் தெரிவித்துள்ளார். சலுகை அடிப்படையில் மேற்படி உதவியை வழங்குவதாக அவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியுள்ளார். இந்த சலுகை இலங்கைக்கு குறுகியகால உதவியகாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உதவியை சீனாவின் எக்சிம் வங்கியூடாக வழங்கவுள்ளதாக […]

அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. அந்த பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டு விடலாம் என்று கருதி அந்த முடிவை கைவிட்டனர். ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உளவு பலூன் பறந்தது பெரும் […]

தலதா மாளிகையில் விசேட பூஜை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஆரம்பமாக கண்டி தலதா மாளிகையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இதேவேளை, 75ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விக்டோரியா அணைக்கட்டுக்கு முன்பாக நடைபெற்ற சிறப்பு பிரித் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டன் பிளிங்கன் சீனாவுக்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல வருடங்களாக தடைப்பட்டுள்ள உயர் மட்ட கலந்துரையாடலில் பிளிங்கன் பங்கேற்க இருந்த நிலையில் தனது விஜயத்தை அவர் இரத்து செய்துள்ளார். எனினும் அமெரிக்க வான் பரப்பில் சீனாவின் கண்காணிப்பு பலூன்கள் பறப்பதால் பிளிங்கன் தனது விஜயத்தை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான சீனாவின் செயற்பாடு அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என சாடியுள்ள பிளிங்கன் […]

இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை

தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள மகளீர் T20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை (ஜெர்சி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்விலேயே சீருடை அறிமுகப்படுத்தப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. மகளீர் T20 உலகக் கிண்ண போட்டிகள் எதிர்வரும் 10 ஆம் ஆரம்பமாகவுள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் இலங்கை மகளீர் அணி நேற்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது. ஷமரி அத்தபத்து இலங்கை மகளீர் T20 அணிக்கு தலைமை தாங்குகிறார். இதேவேளை, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் […]