மண்சரிவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பு கூற வேண்டும்
பூனாகலை கபரகலை தோட்டத்தில் மண்சரிவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பு கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை மாற்றத்தினால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகுவது பெருந்தோட்ட மலையக பகுதிகளே இதனை நன்கு அறிந்தும் நேற்றைய தினம் நடைபெற்ற மண்சரிவு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஏன் முன்னறிவித்தல் விடுக்கப்படவில்லை? இதனை பாரியதொரு குற்றமாகவே […]
மலையக மக்களின் எதிர்கால நலன்புரி வேலை திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம்…
சிங்கப்பூரில் நடைபெற்றும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் – ஆசியா பசிபிக் (ITUC-AP )பிராந்திய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் பங்கேற்றுள்ளார் இம்மாநாட்டில் மலையக மக்களின் எதிர்கால நலன்புரி வேலை திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தோட்ட நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும்
பண்டாரவளை, பூனாகலை கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மீரியபெத்தையில் மண்சரிவு ஏற்பட்ட பின்னர், பதுளை பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கபரகல தோட்டமும் மண்சரிவு அபாய வலயத்தில் இருந்தது. எனவே, அம்மக்களை பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்குமாறும், வீடுகளை அமைப்பதற்கு பாதுகாப்பான இடத்தில் காணி ஒதுக்கி தருமாறும் நாம் […]
காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலி
பதுள, nபசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20) காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இன்று காலை 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் […]
கபரகல மண்சரிவு: ஜீவன் பணிப்பு
பூனாகலை – கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், மண்சரிவு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு விரிவானதொரு அறிக்கையை முன்வைக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளிடம் இன்று வலியுறுத்தினார் அமைச்சர். இவ்வனர்த்தம் தொடர்பில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரஸ்தாபிக்கவுள்ளார். அதன் மூலம் மக்களுக்கு […]
மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதம் – எழுவர் காயம்
(அந்துவன்) பண்டாவளை – பூனாகலை கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், எழுவர் காயமடைந்துள்ளனர். தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பண்டாரவளை பகுதியில் (19.03.2023) நேற்று மாலை முதல் அடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் கபரகலை தோட்ட வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியிலேயே மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இரண்டு லயன் குடியிருப்பு தொகுதிகள் அமைந்துள்ளன. 30 முதல் 40 வரையான வீடுகள் சேதமடைந்துள்ளன என்று […]
இலங்கை இனியும் வங்குரோத்து நாடாக இல்லை
அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் எரிபொருள், உரம், உணவு ஆகியவற்றின் பற்றாக்குறை உள்ளிட்ட பல கடுமையான நெருக்கடிகளுடனே நாட்டைப் பொறுப்பேற்றதையும், பல போட்டிகளில் தோல்வியடைந்த றோயல் அணியைப் போன்ற நிலையே இருந்ததையும் […]
பூனாகலை – கபரகலை தோட்டத்தில் மண்சரிவு
பண்டாரவளை – பூனாகலை – கபரகலை தோட்டத்தில் நேற்று இரவு மண்சரிவொன்று ஏற்பட்டது. அங்குள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட மண்சரிவில்,இதுவரையில் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்தும் தேடுதல் பணிகள் தொடர்வதாக எமது செய்தியாளர் கூறினார். இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள்; பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய அதிகாரிகளுடன் இணைந்து பிரதேச மக்கள் மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபை தலைவர் அசோக்குமார் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக வைத்திய […]
தோல்வி உறுதியாகியுள்ளது. அதனால்தான் தேர்தலை பிற்போடும் முயற்சியில் ஆளுங்கட்சி இறங்கியுள்ளது
(அந்துவன்) ” ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை […]
பஸ்கள் வழங்க எவ்வாறு நிதி? – ஜீவன்
ஊழல் ஒழிப்பு.., ஊழல் ஒழிப்பு… என உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தமது கட்சியால் வழங்கப்பட்டுவரும் பஸ்களுக்கான உதவித்திட்ட வழிமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பஸ்கள் வழங்க எவ்வாறு நிதி கிடைக்கின்றது, அந்த வழிமுறையை சொன்னால் சிறப்பாக இருக்குமென நான் நாடாளுமன்றத்தில் கூறிய […]