யாழில் கோர விபத்து! கணவன் மரணம் , மனைவி படுகாயம்! செல்போன் பேசி சாரதி வாகனம் ஓட்டியதாக மக்கள் புகார்!

யாழில் இன்று  இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மரைவி படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்களிலும் பொலிஸாரின் தண்ணீர் பவுஸராட் நேருக்நேர் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகல் தமத்  கணவருடன் A9 வீதியில் வந்த போது தண்ணீர் பௌசருடன் மோதியதாகவும் கணவர் அந்த இடத்திலேயே பரணமானதாக உயிரழந்தவரின் மனைவியின் உறவினர்கள்  கூறிய்ள்ளார். அவரும் படுகாயமடைந்து இருப்பதாகவும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக கோண்டு சென்றதாக பொலிவார் கூறினர். ஏ9 […]

பலாங்கொடை ஓப்பநாயக்கவில் லொறி – ஜீப் மோதல் ! 6 பேர் காயம்!! !

  பலாங்கொடை ஓப்பநாயக்க உடவல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட 6 பேர்  காயமைடந்தனர். இவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெலிஹுல்ஓயா பிரதேசத்தில் இருந்து எஹலியகொடை பிரதேசத்திற்கு சென்ற டிபென்டர் ஜீப் ஒன்றும் உடவலவ பிரதேசத்தைச் சேர்ந்த மணல் ஏற்றிச்  வந்த லொறியும் ஒன்றுக்கொன்று  மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிபென்டரில் பயணித்த பெண் ஒருவர் உட்பட 5 பேரும் லொறியின் சாரதியும் உட்பட 6 பேருமே காயமடைந்தவர்கள் . […]

அரசியல் சூதாட்டங்கள் வேண்டாம்நேர்மையுடன் நாட்டைக் கட்டியெழுப்புவோம்- சஜித்

நலீர் அகமட் இத்தருணத்தில்,நமது நாட்டில் ஒரு பயங்கரமான பொருளாதார மற்றும் சமூக அழிவு நடைபெற்று வருவதாகவும், இந்நேரத்தில் கிட்டத்தட்ட 60000 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை இழந்துள்ளனர் என்றும்,வறட்சியின் காரணமாக இலட்சக்கணக்கான ஹெக்டயர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும், விவசாயிகள் உட்பட ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட 5,000 பாடசாலை ஆசிரியர்களும் ஏராளமான மருத்துவ நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும்,இதனால், மருத்துவமனைகளின் வார்ட் தொகுதிகள் மூடப்பட்டு அறுவைச்சிகிச்சைகள் கூட இரத்து […]

தமிழியல் மாநாட்டில் மன்னாரை சேர்ந்த  02  அண்ணாவியர் மதிப்பளிப்பு

( வாஸ் கூஞ்ஞ) யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையினரால் கடந்த ஆவணி (7-8) திகதிகளில் நடாத்தப்பட்ட நான்காவது அனைத்துலக தமிழியல் மாநாடு  வழங்கும் நிகழ்வில் நாடு முழுவதும் கலைப் பணி ஆற்றி வரும் பத்து அண்ணாவியர்கள் மதிப்பளிக்கப்பட்டார்கள் இதில்  மன்னார் நானாட்டான் பிரதேசத்தில்  வசிக்கும் செபஸ்தியான் மாசிலாமணி மற்றும் வங்காலையில் வசிக்கும் சீமான் பத்திநாதன் பர்னாந்து ஆகிய இருவரும் மதிப்பளிக்கப்பட்டார்கள் மேலும் செபஸ்தியான் மாசிலாமணி(பிலேந்திரன் ) அவர்கள் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள   […]

இணைந்த கரங்கள் அமைப்பினால் வீரச்சோலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !!

நூருல் ஹுதா உமர் கமு/சது/வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் (85) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை, பாதணி என்பன வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் அந்தோனி சுதர்சன் தலைமையில் இன்றைய தினம் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் அமைப்பு உறவுகளின் நிதி பங்களிப்பு மற்றும் மில்ரோகித் ராஜ்குமார் அவர்களின் நிதி பங்களிப்புடன் இம் மாணவகளுக்கான கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் […]

வரட்சியினால் வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு.

இப்னு ஷெரீப்) நாட்டில் ஏற்பட்ட வரட்சியின் காரணமாக வடக்கு கிழக்கில் 42 ஆயிரத்து 519 குடும்பங்களைச் சேர்ந்த ஓர் இலட்சத்து 38 ஆயிரத்து 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை,  மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 18 ஆயிரத்து 951 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 136 பேர் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார்,  முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய […]

யாழ் வீதிகளை புனரமைக்கும் அங்கஜன் MP

புத்தூர் – கந்தரோடை வீதியின் சுன்னாகம் சந்தி தொடக்கம் மாகியப்பிட்டி சந்தி வரையான பகுதியின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமான கவனிப்பாரற்று காணப்பட்டிருந்த பெரும்பாலான வீதிகளின் புனரமைப்பு பணிகள், யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமா அங்கஜன் இராமநாதன் அவர்களது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி, யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதி, புத்தூர் – சுன்னாகம் கந்தரோடை வீதி, மாவடி […]

தேங்காய்க்குள் தேக்கு! கடத்தியவருக்கு விலங்கு!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கெப் வாகனத்தினுள் சூட்சும்மான மறைத்து கடத்தப்பட்ட தேக்க மரக் குற்றிகளை யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர். சாவகச்சேரி நகர் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் 2:30 மணியளவில் தேக்கம் குற்றிகள் மீட்க்கப்பட்டதோடு முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதான சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். 3 இலட்சம் பெறுமதியான 13 தேக்க மரக்குற்றிகள் இதன்போது மீட்க்கப்பட்டுள்ளன. சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான […]

கணவன் துன்புறுத்தல் தாங்காத மனைவி வாழ்வதை முடித்த சோகம்! ” அம்மா ” எங்கே என தேடும் குழந்தை..

( வாஸ் கூஞ்ஞ)  ஒரு குழந்தையின் தாயான இளம் பெண் கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவனால் இடையிடையே துன்புறுத்தலுக்கு உள்ளாகிய காரணத்தினால் மன விரக்தி அடைந்த நிலையில் தற்கொலைக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மன்னார் வங்காலை நறுவலிக்குளம் மாதிரி கிராமத்தில் வியாழக்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளதாக மரண விசாரனை மூலம் தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக இறந்தவரின் தாயானவரிடம் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரனை மூலம் தெரியவருவதாவது இறந்தவர் திருமதி றெஜினோல்ட் வாசுகி. (வயது 22.) ஐந்து […]

இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக M.A சுமந்திரன்

கடந்த வாரம் இலங்கை பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இவ் இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இக் கூட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.