ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் எப்படியாது?

ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இலகு ரயில் திட்டத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கும் இந்நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பானின் ஆதரவை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கும் ஜப்பானிய பிரதமருடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி மேற்கொண்ட தலையீடானது ஒரு மேம்பட்ட இராஜதந்திர […]

ICCக்கு நெருக்கடி?

உலகக் கிண்ணத்திற்க்கு முன்பாக பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் வர மறுத்தால், பாகிஸ்தான் அணியும் உலகக் கிண்ண தொடருக்கு இந்தியா செல்லாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜீம் சேத்தி தெளிவாகக் கூறியதை அடுத்து பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசிசி தலைவர் கிரெக் பார்க்ளே, சிஇஓ ஜெஃப் அலார்டிஸ் ஆகியோர் லாகூருக்கு வந்துள்ளதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுக முடிவு […]

காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் குறித்து கவனம்

விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு (Bill and Melinda Gates foundation) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விவசாயத் துறையின் நவீனமயமாக்கல், போசாக்கு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்கையில் தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கான […]

மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

உலகில் முன்னணி சேவை நிறுவனங்களுள் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக, மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (31.05.2023) அமைச்சில் நடைபெற்றது. பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். அத்துடன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, […]

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு சீனாவின் முழு ஆதரவு

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக சீன துணை அமைச்சர் நேற்று (30) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போது தெரிவித்தார்

எதிர்பாராதவிதமாக டெங்கு தீவிரமடைகிறது

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையே டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு வழிவகுத்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 38,639 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சீனாவின் அடுத்த திட்டம் இதுவா?

2030-ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு மனிதா்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வது மட்டுமன்றி, வேற்று கிரகத்திற்கு மனிதா்களை அழைத்துச் செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது இந்த திட்டத்தின் நோக்கமாகும். நிலவு உருவானது எவ்வாறு, அதில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பன தொடர்பான கூடுதல் விபரங்களை இந்த திட்டத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என சீன விண்வெளி ஆய்வு மையத்தின் பிரிவான CMSA (China Manned Space Agency) தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் […]

தோல்வியில் முடிந்த வடகொரியாவின் முயற்சி

முதல் உளவு செயற்கைக்கோளை ஏவும் தமது முயற்சி தோல்வியடைந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. இந்த தகவல் வட கொரியாவின் மத்திய செய்தி நிறுவனத்தினால் வௌியிடப்பட்டுள்ளது. உளவு செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடலில் வீழ்ந்துள்ளது. வட கொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்துவதாக அறிவித்ததால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். வட […]

முரண்பாடுகளை ஏற்படுத்த திட்டமிட்ட குழு

முரண்பாடுகளை ஏற்படுத்த திட்டமிட்ட குழுவொன்று முயற்சிப்பதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

A.லோரன்ஸ்  காலமானார் – கொட்டகலை கமர்சியல் மயானத்தில் நல்லடக்கம்

மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் A.லோரன்ஸ்  தனது 71 ஆவது வயதில் காலமானார். பேராதனை போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்னார் காலமானார். 1952 ஆம் ஆண்டு பிறந்த அவர்  தமது ஆரம்ப கல்வியை தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட பாடசாலையில் கற்றார். 1970 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த அன்னார், கொழும்பு பல்கலைக்கழத்தில் தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர்  சேவை […]