மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை – ஜனாதிபதி
அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி மாணவர்களின் வசதி மற்றும் நலன் கருதி செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இதன்படி, குறைந்தது 75 மாணவர்களாவது பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெற்றிருந்தால், அந்தப் பாடசாலையை பரீட்சை நிலையமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பரீட்சை […]
கிங்ஸ்க்கு மீண்டும் மகுடம்
CSK அணி 5 ஆவது முறையாகவும் IPL சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அகதபாத் மைதானத்தில் நேற்றிரவு நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் (GT) அணியை டக்வர்த் லூயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் CSK வென்றது. இதன்மூலம் IPL 2023 தொடரில் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் ஷமி வீசிய முதல் ஓவரில் 3 பந்துகளை ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்து ஒரு […]
ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும்(Photos)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. வெகுசன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நினைவு முத்திரையும் கடித உறையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு […]
காங்கிரஸ் பலமாகவே உள்ளது – ஜீவன்
அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. இதற்கு எமது தற்போதைய அரசியல் வகிபாகமே சிறந்த சான்று என CWC பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில், தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய பிரதேச செயலகங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் […]
மஹியங்கனை புன்னியஸ்தலம் புனிதபூமியாக பிரகடனம் (Photos)
மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி தரப்பின் சிரேஷ்ட காரக சங்க உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி மஹோபாத்யாய வண. உருலேவத்தே தம்மரக்கித்த தேரரிடம் கையளித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரையின் புனரமைப்புப் பணிகளில் பங்கேற்ற சுதந்திர இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் நேற்று (28) பிற்பகல் மஹியங்கனை விகாரைக்குச் […]
LPL ஏலம் ஜூன் 14
2023 LPL வீரர்கள் ஏலம் ஜூன் 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்காக, அணி $500,000 முதலீடு செய்யப் போகிறது என கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஐந்து அணிகளும் $2.5 மில்லியன் வீரர்களுக்கு முதலீடு செய்யப் போகிறது. இலங்கையில் வீரர்கள் ஏலம் நடைபெறுவது இதுவே முதல் முறை. LPL 2023 ஜூலை 30 முதல் ஒகஸ்ட் 20 வரை நடைபெறும்.
இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால்?
சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் IPL இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30க்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். மாற்றுதினமான இன்று IPLL இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் […]
வட மேல் மாகாணத்திற்கு கால்நடைகளை கொண்டு செல்வதும் ஏற்றுமதி செய்வதும் தடை
வட மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. குருணாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் இடையே தோல்கழலை நோய் பரவி வருகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் வடமேற்கு மாகாண பதில் பணிப்பாளர் B.C.S.பெரேரா தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எர்டோகன்
துருக்கி ஜனாதிபதியாக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்/ நேற்று நடந்த மறு தேர்தலில் அவர் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார. 69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் யஷஷ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. IPLலில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக ஜெய்ஸ்வால் 625 ரன்கள் எடுத்தார், இதில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11 வரை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.