உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியம்

மார்ச் மாதத்தில்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட், இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போது, உள்ளூராட்சி மன்ற […]

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வசந்த முதலிகே

இது போராட்டத்தின் மற்றுமொரு ஆரம்பம் என பிணையில் விடுதலையான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகே தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (01.02.2023) பிணையில் விடுதலையான வசந்த முதலிகே, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பில் அவர் கூறும் போது, இந்த நாட்டில் தொழிற்சங்க கூட்டணிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் பலர் ஒன்றாக இணைந்து முன்னெடுத்த போராட்டம் காரணமாக இந்த குண்டர் அரசாங்கம் மக்களின் அதிகாரத்திற்கு […]

மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி (Photos)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்ததோடு அட்டப்பிரிகரவையும் அவருக்கு அன்பளித்தார். மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்காக பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்ததோடு மல்வத்து மகாநாயக்க வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க்கு விசேட […]

நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டு எலெக்ட்ரிக்கல் கடையில் தீ

சிவகாசியைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம். இவர் சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள மணிநகர் பகுதியில் இவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்தக்கடையில் தரை தளம் உட்பட 5 தளங்களில் பல்வேறு மின் சாதனங்கள் மற்றும் பிளம்பிங் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ரவி அருணாச்சலம் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் எலெக்ட்ரிக்கல் கடையில் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதனைப் […]

ரதெல்ல விபத்து- Update

நானுஓயா – ரதெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேருந்து சாரதி கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று நுவரெலியா நீதவான் நாலக சஞ்சீவ எதிரிசிங்க முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சந்தேகநபரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 100,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹொரண குடுஉதுவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்​ை கடந்த வெள்ளிக்கிழமை […]

சிறுமியின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன் – முதல்-அமைச்சர்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்,இந்நிலையில், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த யாழினி என்ற 4 ஆம் வகுப்பு மாணவி, முதலமைச்சரிடம் பேனா […]

நிவாரணம் கேட்டு கிளியின் உரிமையாளர் மீது கோர்ட்டில் வழக்கு

தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் கிளி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஹூவாங் கிளியுடன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். அப்போது அங்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் என்பவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹூவாங்கின் கிளி திடீரென பறந்து சென்று, டாக்டர் லினின் முதுகில் கால்களை வைத்து நின்று இறக்கையை பலமுறை அசைத்தது. இதில் டாக்டர் லின் திடுக்கிட்டு கீழே விழுந்தார். இதில் அவரது இடுப்பு […]

காவு கொடுப்பது என தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம்

தொழிலாளிகளை ஒருமையில் திட்டுவது, உரிமைகளை மறுப்பது, பண்ணையார்களைப் போல அடித்து உதைப்பது, பாதுகாப்பு உபகரணங்களை தரமறுத்து தொழிலாளிகளை கொல்வது, கொதிக்கும் உலைகளுக்கு தொழிலாளிகளை காவு கொடுப்பது என தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் வெளிநாடுகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தாய்லாந்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி நிறுவனம் ஒன்றின் காவலாளியை நித்தமும் திட்டித் தீர்த்து வந்ததால் அந்த காவலாளி கையாலேயே முதலாளிக்கு கத்திக்குத்து ஏற்பட்டிருக்கிறது. சாவத் ஸ்ரீராட்சலாவ் என்ற 44 வயதுடைய காவலாளி அரோம் […]

இங்கிலாந்து நாட்டின் காலனி நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

இங்கிலாந்து நாட்டின் காலனி நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் இருந்த வரை அவரது உருவ படங்கள் பதித்த கரன்சி நோட்டுகள் ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருந்தன. அவர் மறைவுக்கு பின்னர், இங்கிலாந்து அரசராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். இதனை தொடர்ந்து, பழைய கரன்சி நோட்டுகளில் உள்ள ராணி உருவ படத்திற்கு பதிலாக அரசர் சார்லசின் படங்களை இடம் பெற செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி இன்று வெளியிட்டு […]

குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிரான முதல் போட்டியாளராக……??

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் […]