NEW – SLC

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தமது உத்தியோகப்பூர்வ ஜெர்சிசை ஏலம் விட தீர்மானித்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட கேப்ரியரின் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்டில் பாவித்த ஜெசியே ஏலத்தில் விடப்படவுள்ளது. நியூசிலாந்து செஞ்சிலுவை சங்கம் மற்றும் நியூசிலாந்தின் மத்திய வங்கி ஆகியவை இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. இதற்காக இலங்கை அணியுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பறவுள்ள ஒருநாள் போட்டியில் கிடைக்கும் வருமானம் ஒதுக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து அணி

இலங்கை அணிக்கு எதிரான 13 பேர் அடங்கிய டெஸ்ட் குழாத்தை நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அணிக்கு தலைவராக டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார். அணி விபரம் சௌதி – தலைவர் டீம் சவுதி – தலைவர் டொம் ப்ளண்டெல் பிளேர் டிக்னர் நீல் வோக்னர் ஸ்கொட் ஸ்காட் குகெலெகின் ஹென்றி நிக்கோலஸ் கேன் வில்லியம்சன் வில் யேங் மைக்கல் பிரெஸ்வெல் டெவோன் கொன்;வே மேட் ஹென்றி டோம் லெதம் டேரல் மிட்செல் இரு அணிகளுக்கும் இடையிலான […]

கிண்ணத்தை சுவீகரித்தது சன்பேர்ட்ஸ் அணி

நுவரேலியா உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர் கிண்ண இறுதிப் போட்டியில் சன் பேர்ட்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. போட்டியில் நான்குக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் சன் பேட்ஸ் அணியினர் வெள்ளி கிண்ணத்தை கைப்பற்றினர். போட்டியின் முதல் பாதியில் சன் பேட்ஸ் அணி 3.0 என முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் பாதியில் மேலும் ஒரு கோலினையும் அடித்தது. இதன் மூலமாக 4 க்கு 2 என கணக்கில் சன் பேர்ட்ஸ் அணி வெற்றி […]

Australia won by 9 wickets

இந்திய அணிக்கு எதிரான இந்தூரில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த டெஸ்டில் தோற்றாலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் அஹதாபாத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த வெற்றி மூலம் அவுஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

“We’re waiting for you” – மெசிக்கு உயிர் அச்சுறுத்தல்

உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் லியனோல் மெசியின் மனைவியின் குடும்பத்தினரின் வியாபார நிலையத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத போதும் துப்பாக்கிதாரி “மெசி நீ வரும் வரை காத்திருப்போம்” (“We’re waiting for you”) என எழுதி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 14 […]

FIFA

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர். முதலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் இந்திக்க தேனுவர தனது இராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் ஶ்ரீ ரங்காவிற்கு அனுப்பியுள்ளார். உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களான சி.தீபிகா குமாரி மற்றும் சமன் தில்ஹான் நாகஹவத்த ஆகியோரும் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும், உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் டி.சுதாகரும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் […]

முதலிடத்துக்கு முன்னேறியமை அதிஷ்டம்

உலக டெனிஸ் தரப்படுத்தலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியமை தமக்கு கிடைத்த அதிஷ்டம் என நொவேக் ஜேகோவிச் தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆண்டு தமக்கு போராட்டம் மிகுந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க முடியாது தடுக்கப்பட்டாலும் அவர் இந்த ஆண்டு பட்டம் வென்றமை குறிப்பிடதக்கது.

SLC

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்க் சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நேற்று பிற்பகல் நிறைவடைந்துள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட்க் சபைக்கான தேர்தல் எதிர்வரும் மே 20 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது. இதன்போது 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுச் செய்யப்படவுள்ளனர்.

ICC டெஸ்ட் தரவரிசை

ICC டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவுஸ்திரேலிய அணி 136 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. 123 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. மேற்படி இரு அணிகளும் தற்போது இந்துரில் 3 ஆவது டெஸ்டில் மோதுகின்றன. இந்த பட்டியலில் 64 புள்ளிகளை இலங்கையணி பெற்றுள்ளது. இலங்கையணி தற்போது நியூசிலாந்துக்கு டெஸ்ட் தொடருக்காக சென்றுள்ளது.

சிறந்த வீரர் விருதை வென்றார் மெஸ்சி

கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், பிபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2022ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கும், சிறந்த வீராங்கனை விருது ஸ்பெயினின் அலெக்சியா புடெல்லாசுக்கும் வழங்கப்பட்டது.