நியூசிலாந்து திரில் வெற்றி (திரில் காணொளி)

வெலிங்டனில் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 1 ஓட்டத்தால் திரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிந்தது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆண்டர்சனை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் அவுட் ஆக்கினார். இங்கிலாந்து அணி 74.2 ஓவரில் 256 ரன்னுக்கு ஆ(A)ல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து ஒரு […]
BLUE MOUNTAIN அணி நடத்திய மென்பந்து கிரிக்கெட் போட்டி

BLUE MOUNTAIN அணி நடத்திய மறைந்த (அருள் ராஜ்) கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் கிண்ணத்தை பண்டாரவளை SuperYouth அணி வெற்றிக் கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தை RCC Attampitiya அணியும் பெற்றன. மேற்படி இரண்டு அணிகளுக்கும் வெற்றி கிண்ணங்களும் பண பரிசில்களும் வழங்கப்பட்டன. அதேபோல் சிறந்த துடுப்பாட்ட வீரராக சுப்பர் யூத் அணியின் நயன சஸாங்கவும் (Nayana Sasanka) சிறந்த பந்து வீச்சாளராக அதே அணியின் ஜனித்தும் (Janith) தெரிவாகினர். இதன்போது BLUE MOUNTAIN அணியின் […]
T20 கிண்ணத்தை தனதாக்கியது அவுஸ்திரேலிய அணி

தென்னாப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் T20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற மகளிர் T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதையடுத்து 157 ஓட்டங்கள் எடுத்தால் […]
Blue Mountation – விளையாட்டு கழகம்

பண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ் Blue Mountation விளையாட்டு கழகம் நடத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி இன்று நடைபெறவுள்ளது. காலை 9.30க்கு ஊவா- ஹைலண்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. காலையில் மழை பெய்த போதிலும் இப்போது சீரான காலநிலைமை நிலவுவதால் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையில் அணியில 17 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அணி விபரம். திமுத் கருணாரத்ன (தலைவர்) ஓஷத பெர்ணான்டோ குசல் மெண்டிஸ் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தனஞ்சய டி சில்வா தினேஷ் சந்திமால் கமிந்து மெண்டிஸ் நிரோஷன் திக்வெல நிர்ஷன் மதுசங்க ரமேஸ் மெண்டிஸ் ஷாமிக்க கருணாரத்ன கசுன் ராஜித லஹிரு குமார அசித்த பெர்ணான்டோ விஷ்வ பெர்ணான்டோ மிலான் ரத்நாயக்க பெப்ரவரி 27 ஆம் திகதி இந்த குழுவினர் […]
Slc

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் ரூபாய்களை இலாபமாக ஈட்டியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஆண்டுக்கான அதிகப்படியான இலாபமான கருதப்படுகிறது.
AUS WMN won by 5 runs

கேப்டவுனில் நேற்றிரவு இடம்பெற்ற மகளீர் உலகக் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலிய மகளீர் அணி, இந்திய அணியை 5 ஓட்டங்களால் வென்றுள்ளது. இதன்படி தொடர்ந்து 7வது முறையாக உலக மகளீர் உலகக் கிண்ண T20 தொடரின இறுதிச் சுற்றுக்கு அவுஸ்திரேலிய மகளீர் அணி முன்னேறியது. நேற்றைய தீர்மானமிக்க போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய மகளீர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 54 […]
தரவரிசையில் ஹசரங்க…

T20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கையணி வீரர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை பெற்றுள்ளார். 695 புள்ளிகளைப் பெற்றே அவர் முதலிடத்தை பிடித்துள்ளார். அதேபோல் சகலத்துறை வீரர்களுக்கான தரவரிசையில் வனிந்து 175 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான தர வரிசையில் ஹசறங்க 242 புள்ளிகளைப் பெற்று 7 ஆவது இடத்தில் நீடிக்கின்றார்..
குணதிலகவுக்கு சிட்னி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 31 வயதான குணதிலக்க தனது பிணை நிபந்தனைகளை மாற்றுமாறு கோரி இன்று (23) மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார். அவர் மீது நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையிவல் அவர் இதுவரை குற்றங்களை ஒப்புக்கொள்வில்லை.
Icc T20

தென்னாபிரிக்காவில் இடம்பெறும் ICC மகளீர் T20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. அதன்படி முதல் அரையிறுதியில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய மகளீர் அணிகள் இன்று மாலை கேப்டவுனில் மோதவுள்ளன. அதேபோல் நாளை இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க மகளீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அரையிறுதியில வெற்றி பெறும் அணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் மோதவுள்ளன.