மெத்திவ்ஸ்

இலங்கையணியின் சகலத்துறை வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இலங்கை அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் எதிர்வரும் நியூசிலாந்து விஜயத்தில் இணைந்துக்கொள்வார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏஞ்சலோ மெத்திவ்ஸ் சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை ஒரு நாள் அணிக்கு அழைக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
SA WMN won by 10 wickets

T20 மகளீர் உலகக் கிண்ண தொடரில் நேற்று இரவு கேப் டவுனில் இடம்பெற்ற 20 ஆவது போட்டியில் பங்களாதேஷ் மகளீர் அணியை தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் குரூப் A பிரிவில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இலங்கையணி (A) வெற்றி

இங்கிலாந்து லயனஸ் அணிக்கு எதிரக நடைப்பெற்ற உத்தியோகப்பற்றற்ற மூன்றாவது ஒருநாள் (ODI) போட்டியில் இலங்கையணி (A) 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் 2-1 என்ற கணக்கில் இலங்கை A அணி வசமாகியுள்ளது.
NZ WMN won by 102 runs

மகளிர் T20 உலக கிண்ண தொடரில், ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நியூசிலாந்து, இலங்கை அணிகள் நேற்று இரவு பலப்பரிட்சை நடத்தின. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அமேலா கெர் 66 ரன்கள் விளாசினார். 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை […]
England won by 267 runs

நியூசிலாந்து அணிக்கு எதிராக மவுன்ட் மௌகனி மைதானத்தில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
உலகக் கிண்ண ரக்பி போட்டி

உலகக் கிண்ண ரக்பி போட்டியின் சம்பியனுக்கு வழங்கப்படும் கிண்ணம் காட்சிக்காக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், இலங்கை ரக்பி சம்ளேனத்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. உலகக் கிண்ண ரக்பி கிண்ணம் பாரிஸில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன் அதனை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய விளையாட்டு சபையின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். அதன்படி இலங்கை விளையாட்டு ரசிகர்கள் ரக்பி உலகக் கிண்ணத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
IPL – அட்டவணை வெளியீடு

இந்த ஆண்டுக்கான IPL போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31ம் திக்தி தொடங்கி மே 28ம் திகதி வரை போட்டி நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. இரண்டாவது நாளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த […]
BCCI

BCCI தேர்வுக்குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பல சர்ச்சைகுரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்திய அணி தொடர்பான ரசியங்களை சேத்தன் சர்மா கசிய விட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். சேத்தன் சர்மாவின் ராஜினாமா கடிதத்தை BCCI செயலாளர் ஜெய்ஷா ஏற்றுள்ளார்.
AUS WMN won by 10 wickets

மகளிர் T20 உலகக் கிண்ணகிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நுடைபெற்ற குரூப்-1 லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஹர்ஷிதா 34 ரன்கள் சேர்த்தார். அவுஸ்திரேலியா தரப்பில் […]
இந்திய அணி மூன்று வடிவங்களிலும் நம்பர் ONE

நாக்பூரில் நடந்த டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது. இதன் மூலம் T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே முதலிடத்தில் இருக்கும் இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது. இந்தியா தற்போது 115 புள்ளிகளை பெற்றுள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா (111), இங்கிலாந்து (106) உள்ளன. ICC டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியாவை பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்த பிறகு, இந்திய அணி மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 அணியாக மாறியது. ஒரே […]