சாரதிகளுக்கு எச்சரிக்கை…
பஸ் சாரதிகள் போதையில் பஸ்களை செலுத்துகிறார்களா? என்பதை கண்டறியும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“உக்ரனை விட்டுவிடுங்கள்”
G7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் இன்று முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதற்காக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். முதல் நிகழ்வாக, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் பெரும் பேரழிவை சந்தித்த மக்களின் நினைவாக ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த பெரும் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை உறுதியாக தெரியவில்லை. […]
புதிய ஆளுநர்கள் (Photos)
மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
நாடு பூராவும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்
டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போது டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் 2023 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நளின் […]
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டம் ஜனாதிபதி பணிப்புரை
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக தடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தையும்வலியுறுத்தியுள்ளார். களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், களுத்துறை தனியார் வகுப்பு […]
முதற்கட்ட இலங்கை அணி
உலகக் கிண்ண தகுதிச் சுற்று மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிகளுக்கான 30 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இலங்கை அறிவித்துள்ளது. 7 பேட்ஸ்மேன்கள், 9 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 8 ஆல்-ரவுண்டர்கள் அடங்கிய ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான ஆரம்ப அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று விக்கெட் கீப்பர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். T20 உலகக் கிண்ணப் போட்டியில் காயமடைந்த துஷ்மந்த சமிர 7 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை அணிக்கு […]
கல்வி அமைச்சு மீது குற்றச்சாட்டு
பாடசாலைகளைச் சுற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் உரிய பணியாளர்கள் இன்மையால் பாடசாலை தொடர்பான துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அந்த பாடசாலைகளுக்கு அருகில் கழிவுகள் குவிந்து டெங்கு நுளம்புகள் பரவுவது அதிகரித்துள்ளதாகவும்இ இது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை சுதந்திர ஆசிரியர் […]
ஆசியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு இலங்கை எந்த வகையிலும் துணைபோகாது: – ஜனாதிபதி
ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆசிய பூகோள அரசியலுக்கும் பசுபிக் பிராந்திய அரசியலுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அந்த வேறுபாடுகளை நாம் உணர்ந்து சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த இரண்டு தசாப்தங்களில் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையை முன்னேற்றுவதற்கு அணிசேரா கொள்கை, பஞ்சசீலம் மற்றும் ஆசியக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் […]
தலசீமியா பற்றிய எச்சரிக்கை
தலசீமியாவைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடப் பிரிவின் பேராசிரியர் கலாநிதி டொக்டர் சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார். நாட்டின் சனத்தொகையில் 3 வீதமானோர் தலசீமியா நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படைவீரர் நினைவு நிகழ்வு
இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (08) காலை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. எதிர்வரும் மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக தேசிய படைவீரர் […]